2017 ஆகஸ்ட் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-08-23 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) தேசிய அரசுப் பேரவையின் 1977 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க, மீள ஒப்படைத்தல் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ், இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் வியட்நாம் சோசலிசக் குடியரசுக்கும் இடையே மீள ஒப்படைத்தல் பொருத்தனை தொடர்பில் சனாதிபதியினால் ஆக்கப்பட்டு, 2017 யூலை 19 ஆம் திகதிய 2028/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ii) 2014/2015 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான மாத்தளை மாவட்டச் செயலகத்தின் செயற்றிறன் அறிக்கையும் ஆண்டுக் கணக்குகளும்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ லக்கி ஜயவர்தன அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ டபிள்யூ. டீ. ஜே. செனெவிரத்ன
(ii) கௌரவ வஜிர அபேவர்தன - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
வடக்கு ரயில் பாதையில் பாதுகாப்பற்ற ரயில் கடவை மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாயில்காப்பாளர்களின் பிரச்சினைகள் தொடர்பானது
மேற்சொன்ன வினாவிற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பைத் திருத்துவதற்காக
“அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தம்”
எனும் சட்டமூலத்தை அரசாங்கக் கட்சி முதற்கோலாசானுமானவர் பிரேரித்தார்.
சிறப்புரிமை
தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அஜித் பி. பெரேரா அவர்களால் 2017, ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 127ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ கே.கே. பியதாஸ அவர்களுக்கு “சுக்யோ மகிகறி சிறிலங்கா (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“நாட்டின் சில மாவட்டங்களில் நிலவும் வறட்சி நிலைமை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஆகஸ்ட் 24ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






