இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 ஆகஸ்ட் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-08-22

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
‘B’ :  “மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்)” எனும் சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
‘C’ :  “e-Chamber” எனும் சபாமண்டப முகாமைத்துவ தகவல் முறைமை கருத்திட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) உறுப்புரையின் பிரகாரம் 2017 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான (2017.01.01 முதல் 2017.03.31 வரையிலான) தேசிய பெறுகை ஆணைக்குழுவின் முன்னேற்ற அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) தேசிய அரசுப் பேரவையின்  1977 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க,  மீள ஒப்படைத்தல் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ்,  இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் மக்கள் சீன குடியரசுக்கும் இடையே மீள ஒப்படைத்தல் பொருத்தனை தொடர்பில் சனாதிபதியினால் ஆக்கப்பட்டு, 2017 யூன் 20 ஆம் திகதிய 2024/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான உற்பத்தி வரி தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளைகள்-

(ii) 2017 யூன் 09 ஆம் திகதிய 2022/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை  
(iii) 2017 யூன் 19 ஆம் திகதிய 2024/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை 
(iv) 2017 யூலை 11 ஆம் திகதிய 2027/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை

(v) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய மனிதவள அபிவிருத்தி சபை
(vi) 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுக்கான செலசினே தொலைக்காட்சி நிறுவன
(vii) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கைக் கைப்பணிப்பொருட்கள் சபை
(viii) 2013 ஆம் ஆண்டுக்கான அரச அபிவிருத்தி நிருமாணக் கூட்டுத்தாபனம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(ix) 2016 ஆம் ஆண்டுக்கான குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்

(x) 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் 59 ஆம் 63 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும்  142 ஆம் பிரிவின் (2) உட்பிரிவின்  (ப) என்னும் பந்தியின் கீழ் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 யூன் 14 ஆம் திகதிய 2023/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(xi) 1972 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, அரச கமத்தொழிற் கூட்டுத்தாபனங்கள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின்  கீழ் 1978 பெப்புருவரி 01 ஆம் திகதிய 302/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையைத் திருத்தி,   பிரதேச அபிவிருத்தி அமைச்சரால்   ஆக்கப்பட்டு, 2017 யூலை 07 ஆம் திகதிய 2026/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i) போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii) உள்ளக நிருவாகம் மற்றும் அரச முகாமைத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ காமினி லொக்குகே அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ லக்கி ஜயவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(iii) இளைஞர், விளையாட்டுத்துறை, கலை மற்றும்  மரபுரிமைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சீ. பீ. ரத்நாயக்க அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ முஜிபுர் ரஹுமான் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(iv) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i) கௌரவ நிஹால் கலப்பத்தி                         -        இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன                   
(iii) கௌரவ சுஜித் சஞ்ஜய பெரேரா                  -         மூன்று மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா

தற்போதைக்கு அறிமுகப்படுத்தப்படுகின்ற மற்றும் எதிர்கால் அரசாங்க கருத்திட்டங்களில் தமிழ் மொழியில் சரியாக பெயரிடல் மூலம் மொழிக் கொள்கையை முறையாக செயல்படுத்தல் தொடர்பானது

மேற்சொன்ன வினாவிற்கு தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ மனோ கணேசன் அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

பின்வரும் சட்டமூலங்களை காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற்கோலாசானுமான கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்-

(i) காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தல் (திருத்தம்) - 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தல் சட்டத்தைத் திருத்துவதற்காக

(ii) இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல்கள் (திருத்தம்) - 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் சட்டத்தைத் திருத்துவதற்காக


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 ஆகிய விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன:-

(i) தொகை - தலைப்பு 117 - நிகழ்ச்சித்திட்டம் 02
(ii) ஆட்களைப் பதிவு செய்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii) விளையாட்டுக்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“முல்லைதீவு மாவட்டத்தில் கிராம சேவகர் பிரிவுகளில் மக்களுக்கு வயல் நிலங்கள் பெற்றுக் கொடுத்தல் மற்றும் வயல் நிலங்களுக்காக பத்திரத்தை வழங்குதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1921 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஆகஸ்ட் 23ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom