2017 ஆகஸ்ட் 11ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-08-11 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2014 ஆம் ஆண்டுக்கான மருத்துவப் பட்டப்பின படிப்பு நிறுவகம்
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழக தேசிய நூலகம் மற்றும் தகவல் விஞ்ஞான நிறுவனம்
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழக கமத்தொழில் தொழில்நுட்பவியல் மற்றும் கிராமிய விஞ்ஞானங்களுக்கான நிறுவனம்
(iv) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகம்
(v) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவகம்
(vi) 2014 ஆம் ஆண்டுக்கான தேசிய அடிப்படைக் கற்கைகள் நிறுவகம்
(vii) 2014 ஆம் ஆண்டுக்கான அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்ப நிறுவனம்
(viii) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ நிஹால் கலப்பத்தி - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ கே.கே. பியதாஸ
(iii) கௌரவ நாமல் ராஜபக்ஷ
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க
தேசிய செலுத்தல் தளத்தின் மேற்பார்வை மத்திய வங்கியினால் கைநழுவில் செல்லும் அபாயத்தின் காரணமாக ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் தொடர்பானது
மேற்சொன்ன வினாவிற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
அரசாங்கத்தால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணங்களைக் குறைத்தல் தொடர்பாக 2017.08.10 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் எழுப்பிய வினாவிற்கு சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் கௌரவ எஸ். பீ. திசாநாயக்க அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 5 ஆகிய விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன:-
(i) வெற்றிடமாகின்ற கிராம உத்தியோகத்தர் பதவிகளில் பதிற் கடமை புரியும் நியமனங்களுக்காக வினைத்திறன்மிக்க வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்
கிராம உத்தியோகத்தர் பதவியில் வெற்றிடம் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் அண்மையிலுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர் மிகச் சிறியதொரு கொடுப்பனவின் அடிப்படையில் பதிற்கடமைக்காக நியமிக்கப்படுவதாலும், மேற்படி பதிற் கடமை நியமனத்தின் மூலம் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இரண்டினதும் வினைத்திறன் வீழ்ச்சயடைவதாலும், இந்த நிலைமையை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கிராம உத்தியோகத்தர் சேர்மம் ஒன்றை அமைக்க வேண்டுமென்பதோடு, வெற்றிடம் ஏற்படுகின்ற பிரிவுகளுக்கு மேற்படி சேர்மத்திலிருந்து கிராம உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கும், மேற்படி சேர்மத்திலுள்ள கிராம உத்தியோகத்தர்களை, பிரதேச செயலாளரினால் ஒப்படைக்கப்படுகின்ற வேறு பயனுள்ள துறைகளில் அல்லது கடமைகளில் ஈடுபடுத்துவதற்குமான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
(ii) பாடசாலைகளுக்கு பட்டதாரிகளை உளவள அலுவலகர்களாக ஆட்சேர்ப்புச் செய்தல்
நாடளாவிய ரீதியில் இடம்பெறும் பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் ஆகிய குற்றச் செயல்களை இல்லாதொழிக்கும் முகமாக நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளிலும் உள்ள ஆரம்ப, இடைநிலை மற்றும் உயர்தர மாணவர்களுக்கு, அவர்களின் கல்விச் செயற்பாடுக்குச் சமாந்தரமாக வழிகாட்டுவதற்கு பிரதேச செயலகங்களில் தற்போது இணைந்து பணியாற்றுகின்ற உளவள அலுவலர்களின் பணிகளுக்கு ஒப்பான அலுவலர்களைப் பணிக்கு அமர்த்துவதற்கான செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்தி மேற்குறிப்பிட்ட அலுவலரைப் போன்று பட்டதாரிகளை ஒவ்வொரு பாடசாலைக்கும் உள்ளீர்ப்புச் செய்து 2016 ஆம் ஆண்டு முதல் அமுலுக்குவரும் வகையில் விசேட நியமனங்களை வழங்குவதால் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“மிகைசேவை அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிபர்கள் மற்றும் இடையேற்பு அடிப்படையில் சேவை புரியும் அதிபர்கள் ஆகியோரது பிரச்சினைகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சி. சிறீதரன் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1459 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஆகஸ்ட் 22ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






