2017 ஜூலை 28ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-07-28 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்─
• 2011 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XVII ஆம் பகுதியையும், நான்காவது தொகுதியின் VIII ஆம் பகுதியையும்;
• 2012 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XV ஆம் மற்றும் XVI ஆம் பகுதிகளையும், இரண்டாவது தொகுதியின் XXII ஆம் மற்றும் XXIV ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் VII ஆம் மற்றும் VIII பகுதிகளையும், நான்காவது தொகுதியின் XI ஆம் பகுதியையும் ;
• 2013 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XVI ஆம் பகுதியையும், நான்காவது தொகுதியின் XIII ஆம் பகுதியையும்;
• 2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XIII ஆம் மற்றும் XIV ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் XIII ஆம் பகுதியையும், ஆறாவது தொகுதியின் XIV, XV, XVI, XVII, XVIII மற்றும் XIX ஆம் பகுதிகளையும்; மற்றும்
• 2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் X, XI XII, XIII, XIV, மற்றும் XV ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் VII ஆம் பகுதியையும், ஐந்தாவது தொகுதியின் V மற்றும் VI ஆம் பகுதிகளையும்; ஆறாவது தொகுதியின் I மற்றும் II ஆம் பகுதிகளையும்; எட்டாவது தொகுதியின் I ஆம் பகுதியையும்
சமர்ப்பித்ததுடன்,
இவ்வறிக்கைகளை அச்சிடுவதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016 ஆம் ஆண்டுக்கான அமைச்சரவை அலுவலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்
(iii) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை பட்டினி ஒழிப்பு இயக்கச் சபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ ஏ. எச். எம். பெளஸி
(ii) கௌரவ ரவீந்திர சமரவீர - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ
(iv) கௌரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க
வேளாண்மை விதைகளின் உற்பத்திகளை வெளிநாட்டு கம்பனிக்கு அளித்தல் தொடர்பானது
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் (விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2017 யூலை 27))
வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு சபையால் நிறைவேற்றப்பட்டது.
அதனையடுத்து, 1145 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஆகஸ்ட் 04ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






