2017 ஜூலை 26ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-07-26 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
‘B’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுமக்கள் சேவைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் திரவ வாயு உள்ளிட்ட அனைத்து எரிபொருள் வழங்கல் மற்றும் பகிர்ந்தளித்தல் தொடர்பில் சனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டு, 2017 யூலை 25 ஆம் திகதிய 2029/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ii) தேசிய அரசுப் பேரவையின் 1977 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க, மீள ஒப்படைத்தல் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ், இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் உக்ரைனுக்கும் இடையே மீள ஒப்படைத்தல் பொருத்தனை தொடர்பில் சனாதிபதியினால் ஆக்கப்பட்டு, 2017 யூன் 02 ஆம் திகதிய 2021/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்திலுள்ள ஆங்கில மொழி கற்பித்தல் பிரிவை ஆங்கில மொழி கற்பித்தல் துறையாக தரமுயர்த்துதல் தொடர்பில் ஆக்கப்பட்டு, 2017 யூன் 14 ஆம் திகதிய 2023/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iv) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நுண்ணுயிரியல் துறை மற்றும் ஒட்டுண்ணியியல் துறையை நிறுவுவது தொடர்பில் ஆக்கப்பட்டு, 2017 யூன் 14 ஆம் திகதிய 2023/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(v) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, களனி பல்கலைக்கழக சமூக விஞ்ஞானங்கள் பீடத்தில் சர்வதேச கற்கைகள் துறை, சமூகப் புள்ளிவிபரவியல் துறை மற்றும் அரசியல் விஞ்ஞானத் துறை ஆகியவற்றை நிறுவுவது தொடர்பில் ஆக்கப்பட்டு, 2017 யூன் 14 ஆம் திகதிய 2023/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vi) தேசிய அரசுப் பேரவையின் 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, விளையாட்டுக்கள் சட்டத்தின் 31 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 41 ஆம் பிரிவின் கீழ், தேசிய விளையாட்டுச் சங்க ஒழுங்குவிதிகள் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 மே 05 ஆம் திகதிய 2017/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி
(vii) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை மகாவலி அதிகாரசபை
(viii) 2015 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட விமானநிலையம் மற்றும் விமானசேவைகள் (இலங்கை) கம்பனி
(ix) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான சிரம வாசனா நிதியம்
(x) 2013 ஆம் ஆண்டுக்கான வாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(xi) 2016 ஆம் ஆண்டுக்கான கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத் திணைக்களம்
(xii) 2016 ஆம் ஆண்டுக்கான எல்லை நிர்ணய ஆணைக்குழு
(xiii) 2016 ஆம் ஆண்டுக்கான பௌத்த மத அலுவல்கள் திணைக்களம்
(xiv) 2016 ஆம் ஆண்டுக்கான புத்தசாசன அமைச்சு
ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்
(xv) அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பான அனுமதியளிக்கும் வரைவு உடன்படிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ எஸ். பீ. நாவின்ன
(ii) கௌரவ ஹரின் பர்னாந்து
(iii) கௌரவ அசோக் அபேசிங்க
(iv) கௌரவ லக்கி ஜயவர்தன - ஐந்து மனுக்கள்
(v) கௌரவ பிமல் ரத்நாயக்க
(vi) கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே
(vii) கௌரவ புத்திக பத்திறண - மூன்று மனுக்கள்
(viii) கௌரவ நாலக்க பிரசாத் கொலொன்னே
(ix) கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ
(x) கௌரவ சந்தித் சமரசிங்க
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
முச்சக்கர வண்டி சாரதிகளினால் சுற்றுலாத் துறைக்கு ஏற்பட்டுள்ள எதிர்மறையான விளைவுகள் தொடர்பானது
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்படும் வேலைநிறுத்தம் தொடர்பாக பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கூற்றொன்றினை முன்வைத்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, மாகாண சபைத் தோ்தல்கள் சட்டத்தைத் திருத்துவதற்காக
“மாகாண சபைத் தோ்தல்கள் (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வருமான கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 7ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் ஐந்து கட்டளைகள்
(ii) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(iii) நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
அதனையடுத்து, 1535 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஜூலை 27ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






