2017 ஜூலை 25ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-07-25 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
‘B’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) உறுப்புரையின் பிரகாரம் 2016.10.01 முதல் 2016.12.31 வரையிலான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) தேசிய அரசுப் பேரவையின் 1977 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க, மீள ஒப்படைத்தல் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ், இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் ரஷ்ய சம்மேளனத்திற்கும் இடையே மீள ஒப்படைத்தல் பொருத்தனை தொடர்பில் சனாதிபதியினால் ஆக்கப்பட்டு, 2017 யூன் 07 ஆம் திகதிய 2022/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ii) 2017 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை
(iii) 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க, ஆட்களைப் பதிவு செய்தல் சட்டத்தின் 52 ஆம் பிரிவின் (1) ஆம் உப பிரிவின் கீழ், உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2017 மே 31 ஆம் திகதிய 2021/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(iv) 2007/2008, 2008/2009, 2009/2010, 2010/2011 மற்றும் 2011/2012 ஆம் ஆண்டுகளுக்கான நஷனல் பேப்பர் கம்பனி லிமிடெட்
(v) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான தேயிலை சிறு பற்றுநிலங்கள் அபிவிருத்தி அதிகாரசபை
(vi) 2015/2016 ஆம் ஆண்டுக்கான சிறிலங்கன் எயார்லைன்ஸின் ஆண்டறிக்கை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(vii) 2016 ஆம் ஆண்டுக்கான காணி ஆணையாளர் நாயக திணைக்களத்தின் செயற்திறன் அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) வலுவாதார அபிவிருத்தி, சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) உள்ளக நிருவாகம் மற்றும் அரச முகாமைத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ காமினி லொக்குகே அவர்கள் சார்பாக கௌரவ லக்கி ஜயவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ சுசந்த புஞ்சிநிலமே - மூன்று மனுக்கள்
(ii) கௌரவ விஜித ஹேரத்
(iii) கௌரவ ஆனந்த அலுத்கமகே
(iv) கௌரவ முஜிபுர் ரஹுமான்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ தினேஷ் குணவர்தன
மருத்துவ பீட மாணவர் ஒன்றிய செயற்பாட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளர், திரு. ரயான் ஜயலத் அவர்களின் கைது தொடர்பானது
(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா
வடக்கு மற்றும் கிழக்கில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பானது
மேற்சொன்ன வினாவிற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்கள் பதிலளித்தார்.
(iii) கௌரவ அநுர திசாநாயக்க
இந்நாட்டிற்கு பெரியளவில் போதை வஸ்துகளை கடத்துதல் மற்றும் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்தல் தொடர்பானது
மேற்சொன்ன வினாவிற்கு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்நாயக்க அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
மருத்துவ பீட மாணவர் ஒன்றிய செயற்பாட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளர், திரு. ரயான் ஜயலத் அவர்களின் கைது தொடர்பாக இன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் எழுப்பிய வினாவிற்கு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்நாயக்க அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
2015 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைசரும் அரசாங்கக் கட்சி முதற்கோலாசானுமான கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ ஹெக்டர் அப்புஹாமி அவர்களுக்கு “சிட்னி ஜயரத்ன மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
வெளிநாட்டுச் செலாவணி சட்டமூலம்
வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக 96; எதிராக 18), சபையால் திருத்தங்களுடன் அங்கீகரிக்கப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“வடக்கு மற்றும் கிழக்கில் காணாமற்போனோர் எதிர்கொள்ளும் தற்போதைய சிக்கல்கள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஜூலை 26ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






