2017 ஜூன் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-06-22 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் தெரிவுக் குழு ஆகியவற்றின் கூட்டங்கள்
‘B’ : “குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை” எனும் சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016 ஆம் ஆண்டின் தோ்தல் ஆணைக்குழு
(ii) 2016 ஆம் ஆண்டுக்கான சட்ட அலுவல்கள் திணைக்களம்
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு
(iv) 2015 ஆம் ஆண்டுக்கான கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
(v) 2016 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு
ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்
(vi) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஒத்தியல்பு மதிப்பீட்டிற்கான தராதர அங்கீகார சபை
(vii) 2015 ஆம் ஆண்டுக்கான துறுசவிய நிதியம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ திலிப் வெதஆரச்சி
(ii) கௌரவ இரான் விக்கிரமரத்ன - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா - இரண்டு மனுக்கள்
(iv) கௌரவ அஜித் பி. பெரேரா - நான்கு மனுக்கள்
(v) கௌரவ பந்துல குணவர்தன
(vi) கௌரவ புத்திக பத்திறண - மூன்று மனுக்கள்
(vii) கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன்
(viii) கௌரவ சிசிர ஜயகொடி
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடன் நிகழ்ச்சித்திட்டம் மற்றும் பணம் செலுத்தல் செயல்முறையிலுள்ள சிக்கல்கள் தொடர்பானது
மேற்சொன்ன வினாவிற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர், கௌரவ நிரோஷன் பெரேரா அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
துறைமுக அதிகாரசபையில் பணியமர்த்தப்பட்ட பயிலுநர்களின் தொழில் பாதுகாப்பு தொடர்பில் 2017.06.21 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் எழுப்பிய வினாவிற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வருமான கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரு அறிவித்தல்கள்
சபையால் அங்கீகரிக்கப்பட்டன.
அதனையடுத்து, 1603 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஜூன் 23ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






