இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 ஜூன் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-06-21

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை ஆகியவற்றின் இறுதி வரைபுகள் பற்றிய கலந்துரையாடல்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பித்தல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) மற்றும் 55 (5) ஆகிய உறுப்புரைகளின் பிரகாரம் 2017.01.01 முதல் 2017.03.31 வரையிலான காலப்பகுதிக்கான  அரசாங்க சேவை ஆணைக்குழுவின் முன்னேற்ற அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2016 ஆம் ஆண்டு்க்கான தேசிய திட்டமிடல் திணைக்களம்
(ii) 2016 ஆம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவத் திணைக்களம்
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களம்
(iv) 2016 ஆம் ஆண்டுக்கான விசேட பணிப்பொறுப்பு அமைச்சு
(v) 2016 ஆம் ஆண்டுக்கான களுத்துறை மாவட்டச் செயலகம்
(vi) 2016 ஆம் ஆண்டுக்கான வவுனியா மாவட்ட செயலகம்
(vii) 2016 ஆம் ஆண்டுக்கான காணி அமைச்சு
(viii) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை நில அளவைத் திணைக்களம்
(ix) 2016 ஆம் நிதியாண்டுக்கான காணி உரித்து நிருணயத் திணைக்களம்

ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்

(x) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i) கௌரவ வசந்த அலுவிஹாரே                                               -    மூன்று மனுக்கள்
(ii) கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே                   
(iii) கௌரவ சமல் ராஜபக்ஷ                   
(iv) கௌரவ நிஹால் கலப்பத்தி                                                   -    நான்கு மனுக்கள்
(v) கௌரவ எட்வட் குணசேகர                   
(vi) கௌரவ கே.கே. பியதாஸ                   
(vii) கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன                   
(viii) கௌரவ நலின் பண்டார ஜயமஹ                   
(ix)  கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன                   
(x) கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ தினேஷ் குணவர்தன

துறைமுக அதிகாரசபையில் பணியமர்த்தப்பட்ட பயிலுநர்களின் தொழில் பாதுகாப்பு தொடர்பானது

(ii) கௌரவ அநுர திசாநாயக்க

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தின் பாதகமான விளைவுகள் தொடர்பானது


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i) இலங்கை மற்றும் ஐக்கிய அமெரிக்கா இற்கிடையிலான பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பில் 2017.03.21 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள் எழுப்பிய வினாவிற்கு மற்றும் வறட்சி மற்றும் வெள்ளம் காரணமாக டெங்கு பரவுவது தொடர்பில் அரசாங்கத்தால் விரைவாக துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியமை தொடர்பாக 2017.06.20 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் எழுப்பிய வினாவிற்கு பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதிலளித்தார்.

(ii) கட்டார் மற்றும் வளைகுடா பிராந்திய நெருக்கடி தொடர்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்கள் கூற்றொன்றினை முன்வைத்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

1999 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சுகததாச விளையாட்டுகள் கட்டிடத்தொகுதி அதிகாரசபைச் சட்டத்தைத் திருத்துவதற்காக

“சுகததாச தேசிய விளையாட்டுகள் கட்டிடத்தொகுதி அதிகாரசபை (திருத்தம்)”

எனும் சட்டமூலங்களை காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைசரும் அரசாங்கக் கட்சி முதற்கோலாசானுமான கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன அவர்களுக்கு “விஜய உதான மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள்  சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) (திருத்தச்) சட்டமூலம்

சபையால் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“மேல் மாகாணத்தில் குப்பை அகற்றல் நெருக்கடி மற்றும் டெங்கு அச்சுறுத்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ரோஹித அபேகுணவர்தன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1928 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஜூன் 22ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom