2017 ஜூன் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-06-20 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பித்தல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) மற்றும் 153 (ஏ) உறுப்புரைகளின் பிரகாரம், 2017.01.01 முதல் 2017.03.31 வரையிலான கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016 ஆம் ஆண்டுக்கான வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சு
(ii) 2016 ஆம் ஆண்டுக்கான வியாபார மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம்
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான முகாமைத்துவ சேவைகள் திணைக்களம்
(iv) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பாராளுமன்றம்
(v) 2016 ஆம் ஆண்டுக்கான புத்தளம் மாவட்டச் செயலகம்
(vi) 2016 ஆம் ஆண்டுக்கான திருகோணமலை மாவட்டச் செயலகம்
(vii) 2016 ஆம் ஆண்டுக்கான ஹம்பாந்தோட்டை மாவட்டச் செயலகம்
(viii) 2016 ஆம் ஆண்டுக்கான கலாசார அலுவல்கள் திணைக்களம்
(ix) 2016 ஆம் ஆண்டுக்கான நீர்ப்பாசனம் மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ அமைச்சு
(x) 2016 ஆம் ஆண்டுக்கான சிறைச்சாலைத் திணைக்களம்
(xi) 2016 ஆம் ஆண்டுக்கான முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்
(xii) 2016 ஆம் ஆண்டுக்கான இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம்
ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்
(xiii) 2016 ஆம் ஆண்டுக்கான நிதி அமைச்சின் ஆண்டறிக்கை
(xiv) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழான விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2017 மார்ச்சு 28 ஆம் திகதிய 2012/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் (3) ஆம் உப பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்ட கட்டளைகள்;
(xv) 2017 மார்ச்சு 28 ஆம் திகதிய 2012/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(xvi) 2017 மார்ச்சு 31 ஆம் திகதிய 2012/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(xvii) 2017 மே 08 ஆம் திகதிய 2018/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(xviii) 2017 மே 19 ஆம் திகதிய 2019/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(xix) (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதி தீர்வைகள் தொடர்பான தீர்மானம்
(2017 பெப்ரவரி 16 ஆம் திகதிய 2006/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)
(xx) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ், உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் உணர்வழிவியல் துறையை உணர்வழிவியல் மற்றும் அதிதீவிர சிகிச்சைத்துறையாகப் பெயர் திருத்தஞ் செய்து விதிக்கப்பட்டு, 2016 ஒற்றோபர் 26 ஆம் திகதிய 1990/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) வலுவாதார அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளருக்குப் பதிலாக குழு உறுப்பினர் கௌரவ பந்துல குணவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ சுசந்த புஞ்சிநிலமே - மூன்று மனுக்கள்
(ii) கௌரவ அசோக் அபேசிங்க
(iii) கௌரவ பாலித குமார தெவரப்பெரும
(iv) கௌரவ காமினி லொக்குகே
(v) கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ
(vi) கௌரவ பந்துல லால் பண்டாரிகொட - இரண்டு மனுக்கள்
(vii) கௌரவ ஹர்ஷண ராஜகருணா - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ தினேஷ் குணவர்தன
வறட்சி மற்றும் வெள்ளம் காரணமாக டெங்கு பரவுவது தொடர்பில் அரசாங்கத்தால் விரைவாக துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியமை தொடர்பானது
(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா
சட்டவிரோத நடவடிக்கைகளினால் பாலியாறு ஆற்றங்கரைகளில் ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பானது
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி திருவதி மோனிக்கா பின்டோவின் இலங்கை தொடர்பான அறிக்கை பற்றி நீதி அமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான கௌரவ (கலாநிதி) விஜயதாஸ ராஜபக்ஷ அவர்கள் கூற்றொன்றினை முன்வைத்தார்.
(ii) வறட்சி மற்றும் வெள்ளம் காரணமாக டெங்கு பரவுவது தொடர்பில் அரசாங்கத்தால் விரைவாக துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியமை தொடர்பாக 2017.06.20 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் எழுப்பிய வினாவிற்கு சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
(i) நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்) - 2009 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நாட்டைக் கட்டியெழுப்புதல் வரிச் சட்டத்தைத் திருத்துவதற்காக
(ii) உள்ளூர் அதிகாரசபைகள் தோ்தல்கள் (திருத்தம்) - (262 ஆம் அத்தியாயமான) உள்ளூர் அதிகாரசபைகள் தோ்தல்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்காக
எனும் சட்டமூலங்களை காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைசரும் அரசாங்கக் கட்சி முதற்கோலாசானுமான கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ சிசிர குமார அபேசேகர அவர்களுக்கு “ஆனந்த அலுத்கமகே அபிவிருத்தி, சமூக சேவைகள், அறக்கட்டளை மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(ii) கெளரவ ஆனந்த அலுத்கமகே அவர்களுக்கு “சாந்த அபேசேகர அபிவிருத்தி, சமூக சேவைகள் அறக்கட்டளை மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை
(ii) இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஜூன் 21ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






