2017 ஜூன் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-06-06 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் உயிரிழந்தவர்களுக்காக அனுதாபங்களை தெரிவித்தல்
‘B’ : “தேருநர்களை பதிவு செய்தல் (விசேட ஏற்பாடுகள்)” எனும் சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
‘C’ : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றின் பிரதி கிடைக்கப் பெறல்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு
(ii) 2016 ஆம் ஆண்டுக்கான பிரதம அமைச்சர் அலுவலகம்
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்
(iv) 2016 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்
(v) 2016 ஆம் ஆண்டுக்கான திறைசேரிச் செயற்பாடுகள் திணைக்களம்
(vi) 2016 ஆம் ஆண்டுக்கான முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களம்
(vii) 2016 ஆம் ஆண்டுக்கான அரச கணக்குகள் திணைக்களம்
(viii) 2016 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம்
(ix) 2016 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டலுவல்கள் அமைச்சு
(x) 2016 ஆம் ஆண்டுக்கான கேகாலை மாவட்ட செயலகம்
(xi) 2016 ஆம் ஆண்டுக்கான மொனராகல மாவட்ட செயலகம்
(xii) 2016 ஆம் ஆண்டுக்கான அம்பாறை மாவட்ட செயலகம்
(xiii) 2016 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண மாவட்ட செயலகம்
(xiv) 2016 ஆம் ஆண்டுக்கான அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு
ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்
மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 25 ஆம் பிரிவின் கீழ்;
(xv) மதுபான உரிமக் கட்டணம் தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2016 திசெம்பர் 15 ஆம் திகதிய 1997/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல் (மது அறிவித்தல் இலக்கம் 992)
(xvi) சாராய உரிம பத்திரக் கட்டணம் தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2016 திசெம்பர் 20 ஆம் திகதிய 1998/7ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல் (மது அறிவித்தல் இலக்கம் 994)
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, பேராதனைப் பல்கலைக்கழகத்தின்;
(xvii) கலைப்பீடத்தில் உளவியல் துறையை நிறுவுவது தொடர்பில் ஆக்கப்பட்டு, 2017 ஏப்பிறல் 19 ஆம் திகதிய 2015/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xviii) மருத்துவ பீடத்தில் கதிரியக்கத் துறையை நிறுவுவது தொடர்பில் ஆக்கப்பட்டு, 2017 ஏப்பிறல் 19 ஆம் திகதிய 2015/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ சுஜீவ சேனசிங்க
(ii) கௌரவ லக்கி ஜயவர்தன - ஐந்து மனுக்கள்
(iii) கௌரவ ஹர்ஷண ராஜகருணா
(iv) கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன
(v) கௌரவ சந்தித் சமரசிங்க
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
நாட்டில் இயற்கை அழிவுகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை வழங்கல் தொடர்பானது
ஒத்திவைப்புப் பிரேரணை
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஜூன் 07ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






