2017 மே 03ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-05-03 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : வட மாகாண சபையிடமிருந்து கிடைக்கப்பெற்ற செய்தி
‘B’ : “வெளிநாட்டுச் செலாவணி” எனும் சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்─
• 2013 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XIV மற்றும் XV ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் XII ஆம் பகுதியையும் மற்றும் ஆறாவது தொகுதியின் XVI, XVII, XVIII, XIX, XX, XXI, XXII, XXIII, XXIV, XXV ஆம் பகுதிகளையும் ;
• 2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் VI, VII, VIII, IX, X, XI, மற்றும் XII ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் XI மற்றும் XII ஆம் பகுதிகளையும் மற்றும் ஐந்தாவது தொகுதியின் IX ஆம் பகுதியையும்; மற்றும்
• 2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் V மற்றும் VI ஆம் பகுதிகளையும், இரண்டாவது தொகுதியின் VIII, IX, X மற்றும் XI ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் VI ஆம் பகுதியையும் ஐந்தாவது தொகுதியின் II ஆம் பகுதியையும்
சமர்ப்பித்ததுடன், இவ்வறிக்கைகளை அச்சிடுவதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க திருத்தஞ் செய்யப்பட்ட 2013 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க வாழ்வின் எழுச்சி சட்டத்தின் 42 ஆம் பிரிவின் கீழ் மற்றும் அச்சட்டத்தின் 25(2) மற்றும் 29 (2) பிரிவுகளோடு சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 42 ஆம் பிரிவின் கீழ், சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 மார்ச்சு 07 ஆம் திகதிய 2009/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து ஆணைக்குழு
(iii) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான வீதி அபிவிருத்தி அதிகாரசபை
(iv) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய பட்டினி ஒழிப்பு இயக்கச் சபையின் வருடாந்த அறிக்கை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(v) 2016 ஆம் ஆண்டுக்கான மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ திலக் மாரபன அவர்கள் சார்பாக கௌரவ எட்வட் குணசேகர அவர்களினால் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ விஜித ஹேரத் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ வடிவேல் சுரேஷ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ சுஜீவ சேனசிங்க - ஐந்து மனுக்கள்
(iii) கௌரவ வசந்த சேணாநாயக்க
(iv) கௌரவ பாலித குமார தெவரப்பெரும - ஏழு மனுக்கள்
(v) கௌரவ மனுஷ நாணாயக்கார
(vi) கௌரவ தினேஷ் குணவர்தன
(vii) கௌரவ தேனுக விதானகமகே
(viii) கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பிரதம அமைச்சரிடம் கேட்கப்பட்ட வினாக்கள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ ஞானமுத்து ஸ்ரீநேசன்
(ii) கௌரவ உதய பிரபாத் கம்மன்பில
(iii) கௌரவ வேலு குமார்
(iv) கௌரவ விஜித ஹேரத்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
யாழ்ப்பாண தீபகற்பத்தில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மூலம் நேரடி கண்காணிப்பு தொடர்பானது
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
1980 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க, தேருநர்களைப் பதிவுசெய்தல் சட்டத்தின் குறித்த சில தேவைப்பாடுகளிலிருந்து உள்நாட்டில் இடம்பெயர்ந்த ஆட்களுக்கு விலக்களிப்பதற்கு விசேட ஏற்பாடுகளைச் செய்வதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக
“தேருநர்களைப் பதிவுசெய்தல் (விசேட ஏற்பாடுகள்)”
எனும் சட்டமூலத்தினை பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற் கோலாசானுமான கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ எட்வட் குணசேகர அவர்களுக்கு “புற்றுநோய் பராமரிப்பு நம்பிக்கை நிதிய (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 17 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் பத்து கட்டளைகள்
(ii) சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் இரு தீர்மானங்கள்
(iii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள்
(iv) துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை
(v) பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“நீர் மாசடைவதிலிருந்து களனி ஆற்றினை தடுத்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1904 மணியளவில் பாராளுமன்றம் 2017 மே 04ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






