2017 ஏப்ரல் 05ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-04-05 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரைகள் எழுதப்படல்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) மற்றும் 154ண உறுப்புரைகளின் பிரகாரம், 2016 ஒக்டோபர் 01 முதல் 2016 திசெம்பர் 31 வரையிலான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பில், நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2016 நவெம்பர் 11 ஆம் திகதிய 1992/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ், உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்ட கட்டளைகள்-
(ii) 2016 நவெம்பர் 10 ஆம் திகதிய 1992/29 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையைத் திருத்தி ஆக்கப்பட்டு, 2016 திசெம்பர் 27 ஆம் திகதிய 1999/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(iii) 2016 திசெம்பர் 27 ஆம் திகதிய 1999/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையைத் திருத்தி ஆக்கப்பட்டு, 2017 சனவரி 03 ஆம் திகதிய 2000/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(iv) 2017 சனவரி 03 ஆம் திகதிய 2000/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையைத் திருத்தி ஆக்கப்பட்டு, 2017 சனவரி 25 ஆம் திகதிய 2003/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(v) 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, விளையாட்டுக்கள் சட்டத்தின் 31 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 41 ஆம் பிரிவின் கீழ், தேசிய விளையாட்டுக் கழகங்கள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2016 ஒற்றோபர் 27 ஆம் திகதிய 1990/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மற்றும் 2017 பெப்புருவரி 13 ஆம் திகதிய 2006/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
இளைஞர், விளையாட்டுத்துறை, கலை மற்றும் மரபுரிமைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சீ. பீ. ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ சந்திம வீரக்கொடி - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே
(iii) கௌரவ லஸந்த அலகியவன்ன - ஆறு மனுக்கள்
(iv) கௌரவ இரான் விக்கிரமரத்ன
(v) கௌரவ பியங்கர ஜயரத்ன
(vi) கௌரவ லக்கி ஜயவர்தன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பிரதம அமைச்சரிடம் கேட்கப்பட்ட வினாக்கள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ எம்.எச்.எம். சல்மான்
(ii) கௌரவ டலஸ் அழகப்பெரும
(iii) கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா
(iv) கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
நீதிபதிகளுக்கான சம்பளத்தில் திருத்தம் மேற்கொள்ளல் தொடர்பான பிரேரணை
சபையால் நிறைவேற்றப்பட்டது.
அதனையடுத்து, 1700 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஏப்ரல் 06ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






