2017 மார்ச் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-03-23 |
கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகம்
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்
(iii) 2013 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் பட்டப்பின்படிப்பு நிறுவகம்
(iv) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
(v) 2014 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாயப் பட்டப் பின் படிப்பு நிறுவனம்
(vi) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை கொழும்புப் பல்கலைக்கழகம்
(vii) 2014 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர் இரசாயனவியல், மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவகம்
(viii) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவகம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ வசந்த அலுவிஹாரே - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ பாலித குமார தெவரப்பெரும - ஒன்பது மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ டக்ளஸ் தேவானந்தா
மதுகம சி.டப்ளியு.டப்ளியு. கன்னங்கர தேசிய பாடசாலையின் தமிழ் பிரிவில் பௌதீக வளங்களின் குறைபாடு மற்றும் ஆசிரியர்களின் பற்றாக்குறை தொடர்பானது
மேற்சொன்ன வினாவிற்கு கல்வி அமைச்சர், கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ தினேஷ் குணவர்தன
நாட்டில் வேகமாக பரவிவரும் டெங்கு உயிர்கொல்லி நோய் தொடர்பானது
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
நுவரெலியாவிலுள்ள அக்கரபதன பகுதியைச் சேர்ந்த டொரிங்டன் தோட்டத்திற்குரிய கல்மதுரை பிரிவின் 06ஆம் இலக்க தோட்டக் குடியிருப்பின் வீடுகளை புனர்நிர்மாணம் செய்தல் தொடர்பாக 2017.03.10 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுப்பிய வினாவிற்கு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்கள் பதிலளித்தார்.
தனிப்பட்ட விளக்கங்கள்
கௌரவ தினேஷ் குணவர்தன மற்றும் கௌரவ மலித் ஜயதிலக ஆகியோர் வெவ்வேறான இரு தனிப்பட்ட விளக்கங்களை முன்வைத்தனர்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) கைமீட்கப்பட முடியாத நன்கொடை உறுதிகளை முழுமையான நன்றியீனம் என்னும் ஏதுவின்மீது கைமீட்டல் சட்டமூலம்
(ii) குற்றவியல் கருமங்களின் போது பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் கட்டளை
(iii) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வேலையில்லாப் பட்டதாரிகளை நியமித்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றம் 2017 மார்ச் 24ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






