2017 மார்ச் 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-03-10

Print

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய துறைசார் மேற்பார்வைக்      குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i) கௌரவ விஜித ஹேரத்                    -    இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ அஜித் மான்னப்பெரும     -   மூன்று மனுக்கள்
(iii) கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ     -   பத்து மனுக்கள்
(iv) கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா

நுவரெலியாவிலுள்ள அக்கரபதன பகுதியைச் சேர்ந்த டொரிங்டன் தோட்டத்திற்குரிய கல்மதுரை பிரிவின் 06ஆம் இலக்க தோட்டக் குடியிருப்பின் வீடுகளை புனர்நிர்மாணம் செய்தல் தொடர்பானது


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

அம்பாறை மாவட்டத்திலுள்ள கட்டங்கி பாலம் மற்றும் இரு பாதைகளை புனர்நிர்மாணம் செய்தல் தொடர்பாக 2017.03.09 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுப்பிய வினாவிற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வருமான கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

101 ஆம் அத்தியாயமான) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையைத் திருத்துவதற்காக

“குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற் கோலாசானுமான கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ எட்வட் குணசேகர அவர்களுக்கு “இலங்கை பட்டயக் கப்பற் தரகர்கள் நிறுவக (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


அதனையடுத்து, 1150 மணியளவில் பாராளுமன்றம் 2017 மார்ச் 21ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.