2017 மார்ச் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-03-09 |
|
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ விஜித ஹேரத் அவர்கள் சார்பாக கௌரவ சுசந்த புஞ்சிநிலமே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) வியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ சுசந்த புஞ்சிநிலமே - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ மயில்வாகனம் திலகராஜா - மூன்று மனுக்கள்
(iii) கௌரவ எஸ்.எம். மரிக்கார் - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ டக்ளஸ் தேவானந்தா
அம்பாறை மாவட்டத்திலுள்ள கட்டங்கி பாலம் மற்றும் இரு பாதைகளை புனர்நிர்மாணம் செய்தல் தொடர்பானது
(ii) கௌரவ அநுர திசாநாயக்க
பாரிய மோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்தல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட விசாரணைகளின் விளைவு தொடர்பானது
ஒத்திவைப்புப் பிரேரணை
“மாலபேயில் அமைந்துள்ள தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் தொடர்பான தென் ஆசிய நிறுவனம் (SAITM) சார்ந்த பிரச்சினைகள்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றம் 2017 மார்ச் 10ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.