2017 மார்ச் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-03-07 |
|
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : 2016.10.28 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கை சம்பந்தமாக சபா பீடத்தில் வைக்கப்பட்ட சட்ட மா அதிபரின் கடிதம்
‘B’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை போக்குவரத்துச் சபை
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை விவசாய ஆராய்ச்சிக் கொள்கைச் சபை
(iii) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி பயிற்சி நிறுவகம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(iv) 2014 ஆம் ஆண்டுக்கான நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(v) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 32 ஆம் பிரிவின் கீழ், வடிசாலைகள்/சாராய உற்பத்தி களஞ்சியசாலைகளை நிருவகிக்கும் ஒழுங்குவிதிகள் தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2016 திசெம்பர் 09 ஆம் திகதிய 1996/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்.
(மது அறிவித்தல் இலக்கம் 991)
(vi) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 22 ஆம் பிரிவு (1) ஆம் உப பிரிவின் கீழ், போத்தலில் அடைக்கப்பட்ட கள்ளு மீதான வரி தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2016 திசெம்பர் 20 ஆம் திகதிய 1998/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்.
(மது அறிவித்தல் இலக்கம் 993)
(vii) 2015 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க மற்றும் 2016 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டங்களின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2016.12.31 ஆம் திகதியன்றுள்ளவாறு மற்றும் 2017.01.31 ஆம் திகதியன்றுள்ளவாறு தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2016 மற்றும் 2017.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) நல்லிணக்கம் மற்றும் வடக்கையும் கிழக்கையும் மீளக் கட்டியெழுப்புதல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மாவை. சோ. சேனாதிராசா அவர்கள் சார்பாக கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ அஜித் மான்னப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே
(ii) கௌரவ லக்கி ஜயவர்தன - நான்கு மனுக்கள்
(iii) கௌரவ நிஹால் கலப்பத்தி - நான்கு மனுக்கள்
(iv) கௌரவ எட்வட் குணசேகர - நான்கு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ தினேஷ் குணவர்தன
இலங்கை மத்திய வங்கியின் முறி சிக்கல்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பானது
(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா
திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் தொல்பொருட்கள் தொடர்பானது
(iii) கௌரவ அநுர திசாநாயக்க
சமுர்த்தி நலனடைவுகளை விநியோகிப்பதிலுள்ள முறைகேடுகள் காரணமாக சமுர்த்தி பெறுநர்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதி தொடர்பானது
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) மாலபேயில் இடம்பெற்ற சைட்டம் (SAITM) தலைமை நிர்வாக அதிகாரியின் மீதான துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பாக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள் எழுப்பிய வினாவிற்கு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் பதிலளித்தார்.
(ii) இலங்கையில் கொகா கோலா கம்பனியின் உற்பத்தி மையத்தினை நிறுவுதல் தொடர்பாக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுப்பிய வினாவிற்கு அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
வலுக்கட்டாயமாகக் காணாமற் போக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேசச் சமவயாத்துக்குப் பயன்கொடுப்பதற்கும்; வலுக்கட்டாயமாகக் காணாமற்போக்கப்படுதலினால் பலிக்குட்படுத்தப்பட்டோருக்கான நீதியையும் செப்பனீட்டையும் பெறுதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்காக
“வலுக்கட்டாயமாகக் காணாமற்போக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேசச் சமவாயம்”
எனும் சட்டமூலத்தினை உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வரும் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள்
சபையால் நிறைவேற்றப்பட்டன.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“இலங்கையில் தெங்கு பயிர்ச்செய்கையை விருத்தி செய்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ எட்வட் குணசேகர அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1844 மணியளவில் பாராளுமன்றம் 2017 மார்ச் 08ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.