2017 பெப்ரவரி 23ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-02-23 |
|
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலமொன்றிற்கான சான்றுரை எழுதப்படல்
‘B’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுக்கான நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் வருடாந்த செயற்றிறன் அறிக்கை
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
வலுச்சக்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ சந்திம கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண அவர்களினால் பொதுமனு சமர்ப்பிக்கப்பட்டது.
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
இலங்கையில் கொகா கோலா கம்பனியின் உற்பத்தி மையத்தினை நிறுவுதல் தொடர்பானது
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) காணி எடுத்தற் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) இலங்கைப் பொறியியற் பேரவை சட்டமூலம் - திருத்தங்களுடன்
(iii) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“இலங்கை முகங்கொடுக்கும் பெரும் பொருளாதார நெருக்கடி” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பந்துல குணவர்தன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1801 மணியளவில் பாராளுமன்றம் 2017 மார்ச் 07ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.