2017 பெப்ரவரி 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-02-22

Print

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரைகள் எழுதப்படல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை வயம்ப பல்கலைக்கழகம்
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
(iii) 2013 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
(iv) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை பிக்கு பல்கலைக்கழகம்
(v) 2014 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகம்
(vi) 2014 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
(vii) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை களனிப் பல்கலைக்கழகம்
(viii) 2014 ஆம் ஆண்டுக்கான பாளி, பௌத்த கல்விப் பட்டப்பின்படிப்பு (களனிப் பல்கலைக்கழகம்) நிறுவனம்
(ix) 2014 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகம்
(x) 2014 ஆம் ஆண்டுக்கான மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞானத்தில் உயர் கல்விக்கான தேசிய நிலையம்
(xi) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான கட்புல ஆற்றுகைக் கலைகள் பல்கலைக்கழகம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ விஜித ஹேரத் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ     -      இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ ஹர்ஷண ராஜகருணா

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ தினேஷ் குணவர்தன

புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்தல் தொடர்பானது

(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா

மாங்குளம் அபிவிருத்தி கருத்திட்டம் தொடர்பானது

(iii) கௌரவ அநுர திசாநாயக்க

மாலபேயில் இடம்பெற்ற சைட்டம் (SAITM) தலைமை நிர்வாக அதிகாரியின் மீதான துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பானது


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

சரியான ஊக்குவிப்பு செயல்முறை இன்மை மற்றும் இதர தொடர்புபட்ட பிரச்சினைகள் காரணமாக இலங்கை கடற்படையிலுள்ள மாலுமிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள் எழுப்பிய வினாவிற்கு பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற் கோலாசானுமானவர் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தினைத் திருத்துவதற்காக

“தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற் கோலாசானுமான கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ எம்.எஸ். தெளபீக் அவர்களுக்கு “இலங்கை ஒருங்கிணைந்த பட்டயச் செயலாளர்களின் நிறுவன (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“இலங்கையின் சர்வதேச கடப்பாடுகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றம் 2017 பெப்ரவரி 23ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.