2017 பெப்ரவரி 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-02-21

Print

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  “இலங்கை நிலைபேறுதகு அபிவிருத்தி” சட்டமூலம் தொடர்பான எதிர்கால செயற்பாடு

‘B’ :  நிலையியற் கட்டளைகளின் இறுதி வரைவு தொடர்பாக கலந்துரையாடுவதற்கான மூன்றாவது விசேட கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)  2017 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழுவினால் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்  அரசியலமைப்பின் உறுப்புரை 154ண (4) பிரகாரம் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்குச் சமர்ப்பிக்கும் பரிந்துரைகள்

(ii) 2015 ஆம் ஆண்டுக்கான நிருவாக மேன்முறையீடுகள் நியாய சபை
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை மாநாட்டு பணியகம்
(iv) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம்
(v) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஏற்றுமதி கடன் காப்றுதிக் கூட்டுத்தாபனம்
(vi) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(vii) 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(viii) 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க, வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் 139 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 321 ஆம் பிரிவின் கீழ் கொள்கலத்தின் ழுழு மொத்த திரண்மத்தைச் சரிபார்த்தல் தொடர்பில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2016 ஓகத்து 11 ஆம் திகதிய 1979/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i) பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ திலக் மாரபன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii) இளைஞர், விளையாட்டுத்துறை, கலை மற்றும் மரபுரிமைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ சீ.பீ. ரத்நாயக்க அவர்கள் சார்பாக கௌரவ எஸ்.எம். மரிக்கார் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(iii) பெண்கள் மற்றும் பால்நிலை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ துமிந்த திசாநாயக்க                   
(ii) கௌரவ பி. ஹரிசன்                   
(iii) கௌரவ அகில விராஜ் காரியவசம்                   
(iv) கௌரவ ஏ. எச். எம். பெளஸி                   
(v) கௌரவ வசந்த அலுவிஹாரே                   
(vi) கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன -    மூன்று மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ தினேஷ் குணவர்தன

வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் தொடர்பானது

(ii) கௌரவ அநுர திசாநாயக்க

இலங்கை கனிப்பொருள் மணல் லிமிடடின் தகுதிவாய்ந்த அதிகாரியான திரு. அசோக பீரிஸ் அவர்களை அகற்றிமை தொடர்பானது


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கைமீட்கப்பட முடியாத நன்கொடை உறுதிகளை முழுமையான நன்றியீனம் என்னும் ஏதுவின்மீது கைமீட்பதற்கும் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக

“கைமீட்கப்பட முடியாத நன்கொடை உறுதிகளை முழுமையான நன்றியீனம் என்னும் ஏதுவின்மீது கைமீட்டல்”

எனும் சட்டமூலத்தினை உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வருமான கெளரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 4 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை
(ii) ஏற்றுமதி இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“அரிசியிற்கான கட்டுப்பாட்டு விலை” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1915 மணியளவில் பாராளுமன்றம் 2017 பெப்ரவரி 22ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.