2017 பெப்ரவரி 08ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-02-08 |
|
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை நிதி ஆணைக்குழு
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்புச் சேவைக் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரி
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்ட கட்டளைகள்-
(iv) 2016 திசெம்பர் 06 ஆம் திகதிய 1996/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(v) 2016 நவம்பர் 10 ஆம் திகதிய 1992/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(vi) 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3 (4) ஆம் பிரிவின் கீழ் உத்தேசிக்கப்பட்ட கருத்திட்டம் சம்பந்தமாக அளிக்கப்படவுள்ள விலக்களிப்புக்கள் தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 சனவரி 30 ஆம் திகதிய 2004/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மூலம் திருத்தப்பட்டவாறான 2016 திசெம்பர் 06 ஆம் திகதிய 1996/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் மூன்றாவது அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ வடிவேல் சுரேஷ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ (திருமதி) சுமேதா ஜீ. ஜயசேன
(ii) கௌரவ ஈ. சரவணபவன்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பிரதம அமைச்சரிடம் கேட்கப்பட்ட வினாக்கள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ சி. சிறீதரன்
(ii) கௌரவ சீ.பீ. ரத்நாயக்க
(iii) கௌரவ எஸ்.எம். மரிக்கார்
(iv) கௌரவ அநுர திசாநாயக்க
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
திருகோணமலையிலுள்ள கரடிபூவல் கிராம மக்கள் முகங்கொடுக்கும் அடிப்படை வசதிகளிலுள்ள பிரச்சினைகள் தொடர்பானது
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
ஒவ்வொரு ஆண்டும் அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொண்டதன் பின்னர் ஏற்படுகின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்காக அரசாங்கத்தினால் எடுக்கப்படும் நேர்த்தியான நடவடிக்கைகள் தொடர்பாக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள் எழுப்பிய வினாவிற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வருமானவர் பதிலளித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண அவர்களுக்கு “சர்வதேச பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உரிமைகள் பேரவை (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(ii) கெளரவ சிசிர ஜயகொடி அவர்களுக்கு “களனி அசோகாராம சிலுமினி மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் (i) மற்றும் (ii) முறையே மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் மற்றும் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர்ஆகியோருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.
கெளரவ மலித் ஜயதிலக அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது-
(iii) இதயத்துடன் இதய நம்பிக்கைப் பொறுப்பு நிதிய (கூட்டிணைத்தல்)
(iv) பொலன்னறுவை பௌத்த சங்க (கூட்டிணைத்தல்)
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் (iii) மற்றும் (iv) முறையே சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மற்றும் புத்தசாசன அமைச்சர் ஆகியோருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம்
சபையால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட முல்லைதீவு, கேப்பாப்புலவு காணிகளை அதன் அசல் குடிமக்களுக்கு மீளளித்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1904 மணியளவில் பாராளுமன்றம் 2017 பெப்ரவரி 09ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.