2017 ஜனவரி 27ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-01-27 |
|
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டம் மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டங்களின் மூலம் திருத்தப்பட்ட, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஏற்றுமதி இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4 ஆவது பிரிவின் (3)ஆவது உப பிரிவு மற்றும் 14 ஆவது பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய குறித்த சட்டத்தின் 20 ஆவது பிரிவின் கீழ் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2016 திசெம்பர் 30 ஆம் திகதிய 1999/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(ii) 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3 (4) ஆம் பிரிவின் கீழ் உத்தேசிக்கப்பட்ட கருத்திட்டம் சம்பந்தமாக அளிக்கப்படவுள்ள விலக்களிப்புக்கள் தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2016 நவெம்பர் 18 ஆம் திகதிய 1993/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ அஜித் பி. பெரேரா
(ii) கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
அனுதாபப் பிரேரணைகள்
முன்னாள் பாராளுமன்ற சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான, காலஞ் சென்ற கௌரவ எம். எச். மொஹமட் அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.
அதனையடுத்து, 1445 மணியளவில் பாராளுமன்றம் 2017 பெப்ரவரி 07ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.