2016 டிசம்பர் 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-12-10

Print

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தலகள் விடுக்கப்பட்டன-

‘A’ : இணைந்த வருடாந்த பொதுக் கூட்டம்
‘B’ : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை மற்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் இறுதி வரைவு
‘C’ : பாராளுமன்றத்தில் இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

• இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) உறுப்புரையின் பிரகாரம் 2016 ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை; மற்றும்

• இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) ஆம் உறுப்புரை மற்றும் 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின்  30 ஆம் வாசகம்  ஆகியவற்றின் பிரகாரம் 2016 ஆம் ஆண்டின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2014 ஆம் ஆண்டுக்கான தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியம்
(ii) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரசாங்க பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i) கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ வடிவேல் சுரேஷ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா             - மூன்று மனுக்கள்
(ii) கௌரவ பாலித குமார தெவரப்பெரும           - ஆறு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

‘breakingnews.lk’ இணையத்தளத்தை தடை செய்தல் தொடர்பாக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் எழுப்பிய வினாவிற்கு பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ புத்திக பத்திறண அவர்களுக்கு “வர்ள்ட் லய்ப் லய்ன் யோகா நிறுவன (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2017) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2017) ஒதுக்கப்பட்ட இருபத்தைந்தாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்) 2017, 110 பெரும்பான்மை வாக்குகளால் சபையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

மேலும் விபரங்களுக்கு 'வரவு செலவுத் திட்டம் 2017' பிரிவுக்கு விஜயம் செய்க.


(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 17 வரை, 19 மற்றும் 20 ஆகிய விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i) மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் கீழ் அறிவித்தல்
(ii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள்
(iii) உண்ணாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழான தீர்மானம்
(iv) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் ஒன்பது கட்டளைகள்
(v) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள்
(vi) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 108(1) உறுப்புரையின் கீழ் பிரதம நீதியரசர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு ஓய்வூதியத்துடன் கூடிய விசேட நிலையான கொடுப்பனவொன்றை வழங்குவதற்கான பிரேரணை
(vii) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் கீழ் தீர்மானம்


அதனையடுத்து, 1909 மணியளவில் பாராளுமன்றமானது 2017 ஜனவரி 09ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.