2016 டிசம்பர் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-12-07

Print

கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல் விடுக்கப்பட்டது-

‘A’  : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ அசோக் அபேசிங்க                   
(ii) கௌரவ புத்திக பத்திறண        - மூன்று மனுக்கள்
(iii) கௌரவ மயந்த திசாநாயக்க

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2017) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2017) ஒதுக்கப்பட்ட இருபத்திரெண்டாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i) இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபை சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) இலங்கை மின்சாரச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“ஓமந்தை புகையிரத நிலையத்திற்கான புதிய புகையிரதக் கடவை” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1854 மணியளவில் பாராளுமன்றமானது 2016 டிசம்பர் 08ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

[வரவு செலவுத் திட்டம் 2017]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.