2016 நவம்பர் 28ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-11-28

Print

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கைத் தேசிய பொறியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையல்
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான ஆயுர்வேத வைத்திய சபை
(iii) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை கணக்கியல் மற்றும் கணக்காய்வு நியமங்களின் கண்காணிப்பு சபை
(iv) 2014 ஆம் ஆண்டுக்கான துறுசவிய நிதியம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(v) 2015 ஆம் ஆண்டுக்கான விலைமதிப்புத் திணைக்களம்
(vi) 2015 ஆம் ஆண்டுக்கான பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ புத்திக பத்திறண அவர்களினால் ஐந்து பொது மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ தினேஷ் குணவர்தன

விசேட அதிரடைப் பிரிவின் முன்னாள் கட்டளையிடும் அதிகாரி திரு. கே.எல்.எம். சரத்சந்திரவின் கைது தொடர்பானது

(ii) கௌரவ அநுர திசாநாயக்க

சர்க்கரை கொள்கலனில் கொகேன் தொடர்பானது


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2017) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2017) ஒதுக்கப்பட்ட பதின்நான்காம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"


அதனையடுத்து, 1815 மணியளவில் பாராளுமன்றமானது 2016 நவம்பர் 29ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

[வரவு செலவுத் திட்டம் 2017]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.