2016 நவம்பர் 26ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-11-26

Print

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2015 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம்;

(i) 2016.05.18 ஆம் திகதியிலிருந்து 2016.06.24 ஆம் திகதி வரை
(ii) 2016.09.26 ஆம் திகதியிலிருந்து 2016.11.10 ஆம் திகதி வரை

செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2016


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ வஜிர அபேவர்தன    - பத்து மனுக்கள்
(ii) கௌரவ சஜித் பிரேமதாஸ    - மூன்று மனுக்கள்
(iii) கௌரவ புத்திக பத்திறண     - ஐந்து மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ தினேஷ் குணவர்தன

தொழில் திணைக்களத்தின் தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பானது


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2017) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2017) ஒதுக்கப்பட்ட பதின்மூன்றாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"

வாடகைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப்பத்திரத்தில் 2ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)

சபையால் நிறைவேற்றப்பட்டன.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“இலங்கை மத்திய வங்கியின் சில பொறுப்புக்கள் மற்றும் செயற்பாடுகளை தனியார் மயப்படுத்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பந்துல குணவர்தன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றமானது 2016 நவம்பர் 28ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

[வரவு செலவுத் திட்டம் 2017]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.