2016 நவம்பர் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2016-11-23 |
|
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
நேரடி ஒளிபரப்பு வழிகாட்டு நெறிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் வருடாந்த கணக்கும் அறிக்கையும்
குழுக்களின் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குக் குழுவின் இடைக்கால அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ லசந்த அலகியவன்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) “தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ விஞ்ஞானம் பற்றிய தெற்காசிய நிறுவகம் (சைட்டம்) மாதிரியாகக் கொண்டு தனியார்துறையின் பங்கேற்புடன் இலங்கையில் மருத்துவக் கல்வி விரிவாக்கல் சம்பந்தமான கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ வடிவேல் சுரேஷ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ எஸ்.சீ. முத்துகுமாரண அவர்களினால் பொது மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டது.
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
அம்பாறை மாவட்டத்தில் திம்பிரிகொல்ல, வட்டமடுவில் சுமார் 1000 ஏக்கர் அளவு வனப் பிரதேசத்தை சட்டவிரோதமாக அழித்தல் தொடர்பாக கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுப்பிய வினாவிற்கு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர்கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) - குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2017) ஒதுக்கப்பட்ட பத்தாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“குடும்ப விவகாரங்களுக்கு கவுன்சிலொன்றை தாபித்தல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ புத்திக பத்திறண அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1913 மணியளவில் பாராளுமன்றமானது 2016 நவம்பர் 24ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.