2016 நவம்பர் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2016-11-19 |
|
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 1996 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க இராஜதந்திரச் சிறப்புரிமைகள் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2016 ஒக்தோபர் 5 ஆம் திகதிய 1987/23 ஆம் இலக்க கொண்ட அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ii) 2017 வரைவு மதிப்பீட்டு வாசகங்களில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களின் நிரல்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ மஹிந்த சமரசிங்க
(ii) கௌரவ எச்.ஆர். சாரதீ துஷ்மந்த
(iii) கௌரவ ஜே.சீ. அலவத்துவல
(iv) கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன
(v) கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ - பத்து மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) - குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2017) ஒதுக்கப்பட்ட ஏழாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“புத்தளம் ஆதார வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மேம்படுத்தல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ முஹமட் நவவி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1743 மணியளவில் பாராளுமன்றமானது 2016 நவம்பர் 21ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.