2016 நவம்பர் 18ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-11-18

Print

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : அரசியலமைப்பு சபையின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான காணிச் சீர்சிருத்த ஆணைக்குழுவின் ஆண்டறிக்கைகள்

(ii) 1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வீட்டு வாடகைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் 5 ஆம் உப பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய மேற்படி சட்டத்தின் 43 ஆம் பிரிவின் கீழ் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2016 ஆகஸ்ட் 01 திகதிய 1978/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ ஜோன் அமரதுங்க                   
(ii) கௌரவ பி. ஹரிசன்                   
(iii) கௌரவ பிமல் ரத்நாயக்க                                         - இரண்டு மனுக்கள்
(iv) கௌரவ ஆனந்த அலுத்கமகே                                  - இரண்டு மனுக்கள்
(v) கௌரவ இஷாக் ரஹுமான்                   
(vi) கௌரவ முஜிபுர் ரஹுமான்                                     - மூன்று மனுக்கள்
(vii) கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i) அரசாங்கத்தின் அபிவிருத்தி கருத்திட்டங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 58 பேருக்குமான இயக்க குத்தகை முறைமையின் கீழ் மோட்டார் வாகனங்களை கொள்வனவு செய்தல் தொடர்பாக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள் எழுப்பிய வினாவிற்கு நிதி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்கள் பதிலளித்தார்.

(ii) வெளிநாடுகளுடன் வெவ்வேறு வகையான ஒப்பந்தங்களுக்கு பிரவேசிக்கும் போது பாராளுமன்றத்தை முன்கூட்டியே விழிப்பூட்டல் தொடர்பாக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுப்பிய வினாவிற்கு அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2017) - இரண்டாம்  மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2017) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட ஆறாம் நாள் இன்றாகும்.

ஒதுக்கீட்டுச் சட்டமூல (2017) இரண்டாம் மதிப்பீடு சபையினால் அங்கீகரிக்கப்பட்டது. கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களது பெயர்களை அழைப்பதன் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆதரவாக 162 பேரும் எதிராக 55 பேரும் வாக்களித்தனர்.

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) முழுப் பாராளுமன்ற குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


அதனையடுத்து, 1753 மணியளவில் பாராளுமன்றமானது 2016 நவம்பர் 19ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2017]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.