2016 நவம்பர் 11ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-11-11

Print

கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரைகள் எழுதப்படல்
‘B’ : பாராளுமன்ற சபாபீடத்தில் புதிதாகத் தாபிக்கப்பட்டுள்ள ஒலி ஒருங்கிணைப்பு முறைமை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2015 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சு
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு
(iii) 2008, 2009, 2010, 2011, 2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான கட்டடத் திணைக்களம்

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(iv) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கைக் காணிகள் மீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்

(v) 2009 ஆம் ஆண்டின்  20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 54 ஆம் பிரிவின் கீழ், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டனவும் மின் வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 1975/44 ஆம் இலக்க 2016 யூலை 13 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ எஸ். பீ. திசாநாயக்க                   
(ii) கௌரவ லக்ஷமன் கிரிஎல்ல                   
(iii) கௌரவ கயந்த கருணாதிலக்க                   
(iv) கௌரவ சுசந்த புஞ்சிநிலமே      - இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

கௌரவ தினேஷ் குணவர்தன

மாற்றுத் திறனைக் கொண்ட இராணுவ சிப்பாய்கள் மீதான தாக்குதல்


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ மயந்த திசாநாயக்க அவர்களுக்கு “இலங்கை காப்புறுதி நிறுவக (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் நிதி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2017) - இரண்டாம்  மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2017) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட முதலாம் நாள் இன்றாகும்.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தொண்டர் ஆசிரியர்களை நிரந்தர ஊழியர் குழாமில் இணைத்துக் கொள்ளல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


இதனையடுத்து, 1900 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2016 நவம்பர் 12ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2017]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.