2016 ஒக்டோபர் 27ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2016-10-27 |
|
கௌரவ செல்வம் அடைக்கலநாதன், குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய மனிதவள அபிவிருத்தி சபை
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான தென்னை ஆராய்ச்சி நிலையம்
(iii) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபை
(iv) 2014 ஆம் ஆண்டுக்கான அணுசக்தி அதிகாரசபை
(v) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை விவசாய ஆராய்ச்சிக் கொள்கைக்கான சபை
(vi) 2012 ஆம் ஆண்டுக்கான கூட்டாதன முகாமைத்துவ அதிகாரசபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(vii) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கைச் சுங்கம்
(viii) 2015 ஆம் ஆண்டுக்கான மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு
(ix) 2015 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா - மூன்று மனுக்கள்
(ii) கௌரவ பாலித குமார தெவரப்பெரும - நான்கு மனுக்கள்
(iii) கௌரவ மனுஷ நாணாயக்கார - இரண்டு மனுக்கள்
(iv) கௌரவ அநுர திசாநாயக்க - இரண்டு மனுக்கள்
(v) கௌரவ நிஹால் கலப்பத்தி - மூன்று மனுக்கள்
(vi) கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள்
சி.எஸ்.என் செனலுக்கான அனுமதிப்ப்பத்திரத்தினை ரத்துச் செய்தல் தொடர்பானது
(ii) கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்
பொலிஸ் உதவியாளர்கள் தொடர்பான சேவை பிரச்சினைகள்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக வினாவிற்கு பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சபையில் கூற்றினை முன்வைத்தார்.
(ii) கிளிநொச்சி, இரணமடுவில் அமைந்துள்ள நீர்ப்பாசன குள அபிவிருத்தி கருத்திட்டம் காரணமாக மீனவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பாக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுப்பிய வினாவிற்கு கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழ் பதினொரு ஒழுங்குவிதிகள்
சபையினால் நிறைவேற்றப்பட்டன.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“நுவரெலிய மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையினை அதிகரித்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ மயில்வாகனம் திலகராஜா அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1905 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஒக்டோபர் 28ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.