2016 செப்டெம்பர் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-09-23

Print

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கையை சமர்ப்பித்தல்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரால் பொதுமனு சமர்ப்பிக்கப்பட்டது:-

கௌரவ அப்துல் ஹலீம்

(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள்

சுங்கக் கட்டளைக்குப் பதிலாக பிரதியீடு செய்யப்பட்டுள்ள புதிய சட்டத்திற்கு எதிராக சுங்க உத்தியோகத்தர்கள் மேற்கொள்ளும் விதிப் படி வேலை


அனுதாபப் பிரேரணைகள்

பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-

(i) மறைந்த கௌரவ டி.எம். குணசேகர
(ii)  மறைந்த கௌரவ இந்திக்க குணவர்த்தன


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ மலித் ஜயதிலக அவர்களுக்கு “ரஜித கொடிதுவக்கு மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


அதனையடுத்து, 1642 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஒக்டோபர் 04ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.