2016 செப்டெம்பர் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-09-22

Print

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன-

‘A’  : “நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்மானம்
‘B’  :  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
‘C’  :  சபையின் ஒழுக்கம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2014 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி லொத்தர் சபை
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான மக்கள் வங்கி

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i) அரசாங்கக் கணக்குக் குழு (முதலாவது அறிக்கை - ஜனவரி முதல் ஏப்ரல்)
(ii) சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

ஆகியவற்றின் அறிக்கைகளை சமர்ப்பித்தல்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன                   
(ii) கௌரவ பாலித ரங்கே பண்டார                   
(iii) கௌரவ வசந்த அலுவிஹாரே
(iv) கௌரவ லசந்த அலகியவன்ன             - நான்கு மனுக்கள்
(v) கௌரவ லக்கி ஜயவர்தன                   
(vi) கௌரவ புத்திக பத்திறண                    - நான்கு மனுக்கள்
(vii) கௌரவ அஜித் மான்னப்பெரும                   
(viii) கௌரவ சுஜித் சஞ்ஜய பெரேரா

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்

தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடுகள்

(ii) கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்

திவிநெகும அபிவிருத்தி அதிகாரிகளை  ஆட்சேர்க்கும் போது நடாத்தப்படும் திறந்த போட்டிப் பரீட்சை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம்

சபையால் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“சிரிய மக்களின் உடனடி மனிதாபிமான நிலைமை பற்றி முகவரியிடல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ முஜிபுர் ரஹுமான் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1854 மணியளவில் பாராளுமன்றம் 2016 செப்டெம்பர் 23ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.