2016 செப்டெம்பர் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2016-09-21 |
|
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுக்கான மாணிக்கக்கல் ஆபரண ஆராய்ச்சி பயிற்றுவிப்பு நிறுவகம்
(ii) 2012 ஆம் ஆண்டுக்கான தேசிய வியாபார முகாமை நிறுவனம்
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான தேசிய லொத்தர் சபை
(iv) 2011 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மொத்த விற்பனை தாபனம்
(v) 2013 ஆம் ஆண்டுக்கான கரும்பு ஆராய்ச்சி நிலையம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(vi) 2015 ஆம் ஆண்டுக்கான பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பெறுபேற்று அறிக்கையும் கணக்கும்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
(ii) கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
(iii) அரசாங்க நிதி பற்றிய குழு
ஆகியவற்றின் அறிக்கைகளை சமர்ப்பித்தல்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 47 (5) இன் கீழ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 47 (5) இன் பிரகாரம், சமர்ப்பிக்கப்படும் “சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலம் பற்றிய அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ வஜிர அபேவர்தன - பதினொரு மனுக்கள்
(ii) கௌரவ மஹிந்த அமரவீர
(iii) கௌரவ நிஷாந்த முதுஹெட்டிகமகே
(iv) கௌரவ மனுஷ நாணாயக்கார
(v) கௌரவ புத்திக பத்திறண - ஐந்து மனுக்கள்
(vi) கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள்
இலங்கை ஆயுர்வேத மருந்துப் பொருள் கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகள்
(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
நுவரெலிய மற்றும் ஹட்டனுக்கு விசேட (தமிழ்) கல்வி வலயம்
(iii) கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்
வெளிவாரி பட்டங்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளல்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) அனுராதபுரத்திலுள்ள எல்லாள மன்னனுடைய கல்லறையை பாதுகாத்தல் தொடர்பாக கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களால் எழுப்பிய வினாவுக்கு கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கடலரிப்பினால் ஒலிவில் பிரதேசத்தினை பாதுகாத்தல் தொடர்பாக கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களால் எழுப்பிய வினாவுக்கு பதில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர் கௌரவ நிஷாந்த முதுஹெட்டிகமகே அவர்கள் பதிலளித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ எஸ்.எம். மரிக்கார் அவர்களுக்கு “ஆலோகா சமூக சேவை மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றப் புலனாய்வு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை மறுசீரமைத்தல்
(ii) சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்குச் செலுத்தப்படும் ஊதியங்கள் மற்றும் ஏனைய படிகள் (வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆதரவாக 68, எதிராக வாக்குகள் இல்லை)
அதனையடுத்து, 1837 மணியளவில் பாராளுமன்றம் 2016 செப்டெம்பர் 22ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.