2016 செப்டெம்பர் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2016-09-20 |
|
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பின்வரும் அறிவித்தல் விடுக்கப்பட்டது-
‘A’ : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்
சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் I ஆம் பகுதியை சமர்ப்பித்ததுடன், இவ்வறிக்கைகளை அச்சிடுவதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுக்கான அரசாங்க சேவை ஆணைக்குழு
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான அரசாங்க மரக் கூட்டுத்தபானம்
(iii) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபை
(iv) 2014 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(v) 2015 ஆம் ஆண்டுக்கான மாத்தளை மாவட்ட செயலகத்தின் செயற்றிறன் அறிக்கையும் ஆண்டுக் கணக்குகளும்
(vi) 2007 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபை சட்டத்தின் 36 ஆம் பிரிவு (2) ஆம் உப பிரிவின் (ஈ) மற்றும் (உ) பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 67 ஆம் பிரிவின் கீழ் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2016 யூன் மாதம் 15 ஆம் திகதிய 1971/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
(ii) அரசாங்க நிதி பற்றிய குழு
ஆகியவற்றின் அறிக்கைகளை சமர்ப்பித்தல்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ எஸ். பீ. நாவின்ன
(ii) கௌரவ ரீ. பீ. ஏக்கநாயக்க
(iii) கௌரவ ருவன் விஜேவர்தன
(iv) கௌரவ சுஜீவ சேனசிங்க - இரண்டு மனுக்கள்
(v) கௌரவ சுசந்த புஞ்சிநிலமே - மூன்று மனுக்கள்
(vi) கௌரவ இந்திக பண்டாரநாயக்க - இரண்டு மனுக்கள்
(vii) கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி
(viii) கௌரவ ரீ. ரன்ஜித் த சொய்சா
(ix) கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள்
புசல்லாவை பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்தபோது தற்கொலை செய்துகொண்ட ந. ராமசந்திரன்
(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
வெளிநாடுகளுடன் வெவ்வேறு வகையான ஒப்பந்தங்களுக்கு பிரவேசிக்கும் போது பாராளுமன்றத்தை முன்கூட்டியே விழிப்பூட்டல்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) மக்கள் வங்கி டிஜிட்டலாக்கம் சம்பந்தமாக எழுந்துள்ள கேள்விப் பத்திர சிக்கல்கள் தொடர்பாக கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களால் எழுப்பிய வினாவுக்கு அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ கபீர் ஹஷீம் அவர்கள் பதிலளித்தார்.
(ii) சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சினால் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மாற்று திறனாளிகளுக்கு நிவாரணம் மற்றும் வசதிகள் வழங்கல் தொடர்பாக கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களால் எழுப்பிய வினாவுக்கு சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் கௌரவ எஸ். பீ. திசாநாயக்க அவர்கள் பதிலளித்தார்.
(iii) கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்கள், இடமாற்றம் பெறுகின்ற வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு பிரபலமான பாடசாலைகளில் அனுமதி வழங்கல் தொடர்பாக சபையில் கூற்றினை முன்வைத்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
உயர் தொழில் நியமங்களையும் பொறியியல் தொழிலர்களின் நடத்தையையும் பேணுவதற்குப் பொறுப்பாகவிருக்க வேண்டிய இலங்கைப் பொறியியற் பேரவையைத் தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; வெவ்வேறு வகுதியினரான பொறியியல் தொழிலர்களைப் பதிவுசெய்வதற்கும், அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக
“இலங்கைப் பொறியியற் பேரவை”
எனும் சட்டமூலத்தினை உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வருமான கெளரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 3ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 147, நிகழ்ச்சித்திட்டம் 01 (பிரதேச அபிவிருத்தி அமைச்சுக்கான ரூபா. 592,925,000)
(ii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“தொழில் திணைக்களத்தின் தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கைகள்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ விஜித ஹேரத் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1923 மணியளவில் பாராளுமன்றம் 2016 செப்டெம்பர் 21ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.