2016 செப்டெம்பர் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-09-09

Print

கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை

(ii) 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய வரவுசெலவுத் திட்டத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை

(iii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினைத் தாபிப்பது தொடர்பில் ஆக்கப்பட்டு 2016 யூன் 29 ஆம் திகதிய 1973/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(iv) 2015 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2016.08.10 ஆம் திகதியன்றுள்ளவாறு தேசிய வரவு செலவுத்திட்டத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2016


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்                             - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே  
(iii) கௌரவ துலீப் விஜேசேகர                                                 - இரண்டு மனுக்கள்
(iv) கௌரவ அஜித் பி. பெரேரா                                                 - ஐந்து மனுக்கள்
(v) கௌரவ எச்.ஆர். சாரதீ துஷ்மந்த  
(vi) கௌரவ அநுர திசாநாயக்க  
(vii) கௌரவ பிமல் ரத்நாயக்க                                                  - இரண்டு மனுக்கள்
(viii) கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர  
(ix) கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ                   
(x) கௌரவ ஜயந்த சமரவீர
(xi) கௌரவ ரவீந்திர சமரவீர

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள்

மக்கள் வங்கி டிஜிட்டலாக்கம் சம்பந்தமாக எழுந்துள்ள கேள்விப் பத்திர சிக்கல்கள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

(105 ஆம் அத்தியாயமான) மருத்துவக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்காக

“மருத்துவம் (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற் கோலாசானுமான கெளரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பரிஸ் உடன்படிக்கை ஒப்புதலளித்தல்

பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1604 மணியளவில் பாராளுமன்றம் 2016 செப்டெம்பர் 20ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.