2016 செப்டெம்பர் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2016-09-08 |
|
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரைகள் எழுதப்படல்
‘B’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுக்கான அமைச்சரவை அலுவலகம்
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான இரத்தினபுரி மாவட்ட செயலகம்
(iii) 2015 ஆம் ஆண்டுக்கான நுவரேலியா மாவட்ட செயலகம்
(iv) 2015 ஆம் ஆண்டுக்கான வியாபார மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(v) 2013 ஆம் ஆண்டுக்கான தென்னைப் பயிர்ச் செய்கைச் சபை
(vi) 2013/2014 ஆம் ஆண்டுக்கான களுபோவிட்டியான தேயிலை தொழிற்சாலை லிமிரெட்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
வலுவாதார அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை சமர்ப்பித்தல்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்துமபண்டார - மூன்று மனுக்கள்
(ii) கௌரவ பியங்கர ஜயரத்ன
(iii) கௌரவ வசந்த அலுவிஹாரே
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
ஒத்திவைப்புப் பிரேரணை
“கலை மற்றும் கலாசாரத் துறையில் நிலவும் பிரச்சினைகள்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2016 செப்டெம்பர் 09ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.