2016 ஆகஸ்ட் 11ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-08-11

Print

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2015 ஆம் ஆண்டுக்கான கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம்
(ii) 2015 ஆண்டுக்கான கண்டி மாவட்ட செயலகம்
(iii) 2015 ஆம் ஆண்டுக்கான கம்பனிகள் பதிவாளர் திணைக்களம்
(iv) 2015 ஆம் ஆண்டுக்கான வர்த்தகத் திணைக்களம்

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(v) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ் பட்டமளிக்கும் நிறுவகமாக, “காட்சு (KAATSU) மிக உயர்ந்த மருத்துவ தொழில்நுட்பவியல் பயிற்சி நிலையம் (பிறைவேட்) லிமிடெட் (KIU) ” ஐ அங்கீகரித்து உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2016 ஏப்பிறல் 08 ஆம் திகதிய 1961/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(vi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ்  பி.வி. 62877 என்னும் பதிவிலக்கத்தைக் கொண்ட “ஹொரைசன் கொலிஜ்ஒப் பிஸ்னஸ் அன்ட் டெக்னோலொஜி (பிறைவேட்) லிமிட்டெட்” ஐப் பட்டமளிக்கும் நிறுவகமாக, அங்கீகரித்து  ஆக்கப்பட்டு,   2015 திசெம்பர் 07 ஆம் திகதிய 1944/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையைத் திருத்தி உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு,   2016 ஆம் ஆண்டு யூலை 14 ஆம் திகதிய 1975/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(vii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ் “நஷனல் ஸ்கூல் ஒப் பிஸ்னஸ் மனேஜ்மன்ட் லிமிட்டெட் ” ஐப் பட்டமளிக்கும் நிறுவகமாக  அங்கீகரித்து  ஆக்கப்பட்டு, 2016 சனவரி 19 ஆம் திகதிய 1950/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையைத் திருத்தி உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2016 ஆம் ஆண்டு யூலை 14 ஆம் திகதிய 1975/48 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(viii) 2013 ஆம் ஆண்டுக்கான அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம்
(ix) 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ திலிப் வெதஆரச்சி                   
(ii) கௌரவ சுசந்த புஞ்சிநிலமே                      -                    மூன்று மனுக்கள்
(iii) கௌரவ இரான் விக்கிரமரத்ன                   
(iv) கௌரவ காமினி லொக்குகே                   
(v) கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி                -                    நான்கு மனுக்கள்
(vi) கௌரவ ஜயந்த சமரவீர                             -                    மூன்று மனுக்கள்
(vii) கௌரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா                   
(viii) கௌரவ புத்திக பத்திறண                          -                    ஐந்து மனுக்கள்
(ix) கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ         -                    ஐந்து மனுக்கள்
(x) கௌரவ ஹர்ஷன ராஜகருணா                   
(xi) கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள்

உள்ளூராட்சி சபைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை ஒதுக்காமை தொடர்பானது

(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்

கிளிநொச்சி, பூநகரிப் பிரதேசத்தில் நீர்ப்பாசன பிரச்சினை தொடர்பானது


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கான பொது மன்னிப்பு தொடர்பாக கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களால் எழுப்பிய வினாவுக்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம். சுவாமிநாதன் அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டமூலம்

சபையால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.


அதனையடுத்து, 1435 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஆகஸ்ட் 12ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.