2016 ஜூலை 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-07-22

Print

கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’  : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம்
‘B’  : உயர் பதவிகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
‘C’  : பொது மனுக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2012 ஆம் ஆண்டுக்கான படைவீரர்கள் சேவை அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை

(ii) 2015 ஆம் ஆண்டுக்கான காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்
(iii) 2015 ஆம் ஆண்டுக்கான சர்வதேச வர்த்தக மற்றும் திறமுறை அபிவிருத்தி அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ சாகல ரத்நாயக்க                   
(ii) கௌரவ திலிப் வெதஆரச்சி                           - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ மனுஷ நாணாயக்கார                       - இரண்டு மனுக்கள்
(iv) கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்                   
(v) கௌரவ முஹம்மது இப்ராஹிம் முஹம்மது மன்சூர்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்

அனுராதபுரத்திலுள்ள எல்லாள மன்னனுடைய கல்லறையை பாதுகாத்தல் தொடர்பானது


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

கிளிநொச்சி, பூநகரிலுள்ள மக்கள் குடிநீர் பிரச்சினையால் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பாக கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களால் எழுப்பிய வினாவுக்கு நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கௌரவ ரஊப் ஹகீம் அவர்கள் பதிலளித்தார்.


ஒத்திவைப்புப் பிரேரணை

“நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1805 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஆகஸ்ட் 09ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.