2016 ஜூலை 21ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2016-07-21 |
|
கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் தெரிவுக் குழு ஆகியவற்றின் கூட்டங்கள்
சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்-
• 2013 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் IX மற்றும் X பகுதியையும், மூன்றாவது தொகுதியின் VI ஆம் பகுதியையும், ஐந்தாவது தொகுதியின் VIII மற்றும் IX ஆம் பகுதிகள்; மற்றும்
• 2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XI, XII ஆம் பகுதிகளையும், ஐந்தாவது தொகுதியின் IV, V ஆம் பகுதிகளையும்
சமர்ப்பித்ததுடன், இவ்வறிக்கைகளை அச்சிடுவதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016 யூன் 22 ஆந் திகதிய 1972/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப்பத்திரிகை மூலம் சிங்கள மற்றும் தமிழ்மொழி பிரதிகளில் அச்சுப் பிழைகள் திருத்தம் செய்யப்பட்ட, மோட்டார் வாகனச் சட்டத்தின் (203 ஆவது அத்தியாயமான) 122 ஆம் பிரிவு மற்றும் VII அ பகுதியுடன் சேர்த்து வாசிக்கப்படும், குறித்த சட்டத்தின் 237 ஆவது பிரிவின் கீழ் போக்குவரத்து மற்றும் சிவில் விமானச்சேவைகள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2015 நவெம்பர் 02 ஆம் திகதிய 1939/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப்பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள்
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான மருத்துவப் பட்டப் பின்படிப்பு நிறுவகம்
(iii) 2013 ஆம் ஆண்டுக்கான திறன்கள் அபிவிருத்தி நிதியம்
(iv) 2013 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(v) 2015 ஆம் ஆண்டுக்கான புத்தளம் மாவட்டச் செயலகம்
(vi) 2013 ஆம் ஆண்டுக்கான ஆயுர்வேதத் திணைக்களம்
(vii) 2015 ஆம் ஆண்டுக்கான பொது நம்பிக்கை பொறுப்பு திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
(ii) அரசாங்க நிதி பற்றிய குழு
(iii) வலுச்சக்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
ஆகியவற்றின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
(ii) கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா
(iii) கௌரவ எஸ்.சீ. முத்துகுமாரன
(iv) கௌரவ சி. சிறீதரன் - இரண்டு மனுக்கள்
(v) கௌரவ ஆனந்த அலுத்கமகே
(vi) கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி - ஏழு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சினால் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மாற்று திறனாளிகளுக்கு நிவாரணம் மற்றும் வசதிகள் வழங்கல் தொடர்பானது
(ii) கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்
அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதியோர்களை வரவேற்கும் வைபவத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பானது
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள், சிங்கப்பூர் நாட்டுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பாக சபையில் கூற்றினை முன்வைத்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தைத் திருத்துவதற்காக
“பல்கலைக்கழகங்கள் (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வருமாகிய கெளரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பிரேரித்தார்.
சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
சபரகமுவ மாகாண சுற்றுலாத்துறை பணியக நியதிச்சட்ட வரைவு
இதன் அறிக்கையை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால எல்லையை 2016 ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதிவரை காலத்தை நீடிப்பதற்கான உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வருமாகிய கெளரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களின் பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) இலங்கை அணுசக்தி சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) ஏற்றுமதி இறக்குமதிக் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள்
அதனையடுத்து, 1600 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஜூலை 22ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.