2016 ஜூலை 05ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2016-07-05 |
|
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பின்வரும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன-
‘A’ : “ஓமியோபதி”
‘B’ : “நிதி முகமைத்துவம் (பொறுப்பு) (திருத்தம்)”
எனும் சட்டமூலங்கள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்மானங்கள்
‘C’ : அண்மைய திறைசேரி முறி சிக்கல்கள் தொடர்பாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) பொருளாதாரம் தொடர்பான காலாண்டு அறிக்கை
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான சமூக சேவைகள் திணைக்களம்
(iii) 2015 ஆம் ஆண்டுக்கான முகாமைத்துவ சேவைகள் திணைக்களம்
(iv) 2015 ஆம் ஆண்டுக்கான சட்ட அலுவல்கள் திணைக்களம்
(v) 2015 ஆம் ஆண்டுக்கான குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(vi) 2013 ஆம் ஆண்டுக்கான தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை
(vii) 2013 ஆம் ஆண்டுக்கான தேசிய விஞ்ஞான மன்றம்
(viii) 2013 ஆம் ஆண்டுக்கான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது,
(ix) இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினைத் தாபிப்பது தொடர்பில் ஆக்கப்பட்டு 2016 மார்ச்சு 29 ஆம் திகதிய 1960/9 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(x) இலங்கை ஸ்ரீஜயவர்தனபுரப் பல்கலைக்கழகத்தினைத் தாபிப்பது தொடர்பில் ஆக்கப்பட்டு 2016 பெப்புருவரி 19 ஆம் திகதிய 1954/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4) ஆம் பிரிவின் கீழ் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் இலங்கை கம்பஹா விக்கிரமாராச்சி ஆயுர்வேத நிறுவகத்தின் பணிப்பாளருக்குப் பதிலாக தகுதிவாய்ந்த அதிகாரியொருவரை நியமித்து 2016 மே 30 ஆம் திகதிய 1969/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ பி. ஹரிசன்
(ii) கௌரவ கயந்த கருணாதிலக்க
(iii) கௌரவ (திருமதி) தலதா அதுகோரல - இரண்டு மனுக்கள்
(iv) கௌரவ பியங்கர ஜயரத்ன
(v) கௌரவ பிமல் ரத்நாயக்க
(vi) கௌரவ சந்தித் சமரசிங்க
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
வடக்கு மற்றும் கிழக்கு தவிர்ந்த தீவிலுள்ள தமிழ் பாடசாலைகளில் நிலவும் பல்வேறு குறைபாடுகள்
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
(i) 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, இறப்புக்களின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்துவதற்காக
“இறப்புக்களின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற் கோலாசானுமாகிய கெளரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.
(ii) 1986 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, விலங்குத் தீனிச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“விலங்குத் தீனி (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கிராமியப் பொருளாதார விவகாரங்கள் பற்றிய அமைச்சர் கெளரவ பி. ஹரிசன் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஓமியோபதி சட்டமூலம்
சபையால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“யுத்தத்தினால் ஊனமுற்றுள்ள மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் மற்றும் விசேட தேவைப்பாடுகள்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1905 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஜூலை 07ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.