2016 ஜூன் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2016-06-23 |
|
கௌரவ செல்வம் அடைக்கலநாதன், குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பாராளுமன்றத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவகம்
(iii) 2013 ஆம் ஆண்டுக்கான தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா
(ii) கௌரவ கயந்த கருணாதிலக்க
(iii) கௌரவ நிரோஷன் பெரேரா
(iv) கௌரவ சீ. பீ. ரத்நாயக்க
(v) கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
கிளிநொச்சியில் விளையாட்டரங்கு
(ii) கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்
பொலிஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு வழங்கும்போது முறையான ஒழுங்குமுறையொன்றை அறிமுகம் செய்தல்
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ பத்ம உதயசாந்த குணசேகர அவர்களுக்கு “சிசிர ஜயக்கொடி சியபத மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
கெளரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(ii) கனேகம ஸ்ரீ இந்ரசார தர்மாயதன சங்ரக்ஸன சபை (கூட்டிணைத்தல்)
(iii) டாக்டர் சமன் வீரசிங்க மன்ற (கூட்டிணைத்தல்)
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் (ii) மற்றும் (iii) முறையே புத்தசாசன அமைச்சர் மற்றும் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் ஆகியோருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
தகவலுக்கான உரிமை சட்டமூலம்
விவாதிக்கப்பட்டதுடன், நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“யானைகள் மற்றும் கடல் பாலூட்டிகளை பாதுகாப்பதற்கான ஒழுங்குவிதிகள்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1852 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஜூன் 24ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.