2015 செப்டெம்பர் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-09-22 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
புதிய உறுப்பினர்களின் உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கெளரவ சபாநாயகரின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
- கெளரவ பாலித குமார தெவரப்பெரும (களுத்துறை மாவட்டம்)
- கெளரவ பிமல் நிரோஷன் ரத்னாயக்க வீரகோன் (தேசியப் பட்டியல்)
- கௌரவ லக்ஷ்மன் பின்து ஜயதிலக செனெவிரத்ன (பதுளை மாவட்டம்)
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ மற்றும் ‘B’: பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ சரத் மாயாதுன்னே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ சாமர சம்பத் தசநாயக்க ஆகியோரது பதவி துறக்கும் கடிதங்கள்
சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், 2013 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XI மற்றும் XII ஆம் பகுதிகளையும் மூன்றாவது தொகுதியின் III ஆம் மற்றும் IV ஆம் பகுதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2014 ஆம் ஆண்டுக்கான பிரதம அமைச்சர் அலுவலகம்
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பாராளுமன்றம்
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அலுவலகம்
(iv) 2015 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை
(v) 2003 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க அரசிறை முகாமைத்துவ (பொறுப்புச்) சட்டத்தின் 16 ஆம் பிரிவின் கீழ் தேர்தலுக்கு முன்னரான வரவு செலவுத்திட்ட நிலைமை அறிக்கை - 2015
(vi) 2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் 2ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் கீழ் நீதி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2015 யூன் மாதம் 25 ஆம் திகதிய 1920/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்
எவன்ட்காட் பிரச்சினை சம்பந்தமான கூற்று
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க - ஜெனீவா மனித உரிமைகள் சபையின் அறிக்கை பற்றியது
(ii) சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ திலக் மாரபன - சேயாவின் கொலை வழக்கு
ஆகியோர் சபையில் கூற்றுக்களை முன்வைத்தனர்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
கெளரவ நிதி அமைச்சர்அவர்கள் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்:-
(i) உண்ணாட்டரசிறை (திருத்தம்) - 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது.
(ii) சேர்பெறுமதி வரி (திருத்தம்) - 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சேர் பெறுமதி வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கானது.
(iii) நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்) - 2009 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, நாட்டைக் கட்டியெழுப்புதல் வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கானது.
(iv) நிதி - மதுச்சாலைகள் மற்றும் தவறணைகள் அறவீடு, சீட்டாட்டத் தொழில் அறவீடு, அதிஈட்ட வரி, செல்லிடத் தொலைபேசி தொழிற்படுத்துநர் அறவீடு, வீட்டுக்கு நேரடி செய்மதிச் சேவைகள் அறவீடு, செய்மதி அமைவிட அறவீடு, அர்ப்பணிக்கப்பட்ட விளையாட்டு அலைவரிசை அறவீடு, மாளிகை வரி, குடியகல்வு வரி அத்துடன் மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் உரிமக்கட்டணைத்தை விதிப்பதற்கு ஏற்பாடுசெய்வதற்கும் அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட மற்றும் அதன் இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கானது.
(v) பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தம்) - 2006 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, பொருளாதாரச் சேவை விதிப்பனவுச் சட்டத்தைத் திருத்துவதற்கானது.
(vi) தொலைத்தொடர்பு அறவீட்டுத் (திருத்தம்) - 2011ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க, தொலைத்தொடர்பு அறவீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கானது.
(vii) பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தம்) - 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, பந்தய, சூதாட்ட விதிப்பனவுச் சட்டத்தைத் திருத்துவதற்கானது.
தெரிவுக்குழு
121 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், நடப்புக் கூட்டத்தொடரின் சேவைக்கான தெரிவுக்குழு சபாநாயகரின் தலைமையிலும் அரசியற் கட்சிகளின் தலைவர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளாகிய பாராளுமன்றத்தினால் பெயர் குறிப்பிடப்படும் பத்தொன்பது (19) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் நடப்புக் கூட்டத்தொடரின் போது இத்தெரிவுக் குழுவில் தவிசாளராக சபாநாயகரும், பின்வரும் பத்தொன்பது (19) உறுப்பினர்கள் அக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்களாக என பாராளுமன்றச் சபை முதல்வரினால் பிரேரிக்கப்பட்ட பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.
கௌரவ ஜோன் அமரதுங்க
கௌரவ நிமல் சிறிபால த சில்வா
கௌரவ ரஊப் ஹகீம்
கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல
கௌரவ மஹிந்த சமரசிங்ஹ
கௌரவ ரவி கருணாநாயக்க
கௌரவ றிஸாட் பதியுதீன்
கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க
கௌரவ துமிந்த திசாநாயக்க
கௌரவ கபீர் ஹஷீம்
கௌரவ (கலாநிதி) விஜயதாஸ ராஜபக்ஷ
கௌரவ கயந்த கருணாதிலக்க
கௌரவ மனோ கணேசன்
கௌரவ தினேஷ் குணவர்தன
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
கௌரவ விஜித ஹேரத்
கௌரவ மாவை சோ. சேனாதிராசா
கௌரவ தருமலிங்கம் சித்தார்தன்
கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் கீழான தீர்மானம்
சபையால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைக்கு மாறாக அரச துறைக்கு ஆட்சேர்ப்பு செய்தல்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2015 செப்டெம்பர் 23ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






