இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2015 ஜூன் 25ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2015-06-25

கௌரவ சந்திம வீரக்கொடி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன.-

‘A’  : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2014 ஆம் ஆண்டிற்கான யாழ்ப்பாண மாவட்ட செயலகம்
(ii) 2014 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தி நிதித் திணைக்களம்

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ துமிந்த திசாநாயக்க - மூன்று மனுக்கள்                   
(ii) கெளரவ வசந்த அலுவிஹாரே - இரண்டு மனுக்கள்
(iii) கெளரவ விக்டர் அந்தனீ

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i) பிரதம அமைச்சரும் கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க

(ii) கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க

ஆகியோர் சபையில் கூற்றுக்களை முன்வைத்தனர்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

விளையாட்டில் ஊக்குவிப்புப் பதார்த்தப் பயன்பாடிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“2015 ஜுன் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்த கூற்று” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2015 ஜூன் 26ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom