2015 ஜூன் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-06-23 |
கௌரவ சமல் ராஜபக்ஷ, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்,
• 2012 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் VI ஆம் பகுதி, ஐந்தாவது தொகுதியின் VI, VII மற்றும் VIII ஆம் பகுதிகள் மற்றும் ஆறாவது தொகுதியின் XVI, XVII, XVIII, XIX மற்றும் XX ஆம் பகுதிகள்; மற்றும்
• 2013 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் II ஆம் பகுதி, இரண்டாவது தொகுதியின் IV, V, VI மற்றும் VII ஆம் பகுதிகள், மூன்றாம் தொகுதியின் I மற்றும் II ஆம் பகுதிகள் மற்றும் நான்காவது தொகுதியின் IV ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2014 ஆம் ஆண்டிற்காக தேர்தல்கள் ஆணையாளர்
(ii) 2014 ஆம் ஆண்டிற்கான மட்டக்களப்பு மாவட்ட செயலகம்
(iii) 2014 ஆம் ஆண்டிற்கான களுத்துறை மாவட்ட செயலாளர்
(iv) 2014 ஆம் ஆண்டிற்கான கேகாலை மாவட்ட செயலகம்
(v) 2014 ஆம் ஆண்டிற்கான வவுனியா மாவட்ட செயலகம்
(vi) 2013 ஆம் ஆண்டிற்கான கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு
(vii) 2014 ஆம் ஆண்டிற்கான உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சு
(viii) 2014 ஆம் ஆண்டிற்கான முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களம்
(ix) 2014 ஆம் ஆண்டிற்கான அரச கணக்குகள் திணைக்களம்
(x) 2014 ஆம் ஆண்டிற்கான கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களம்
(xi) 2014 ஆம் ஆண்டிற்கான உள்ளகப் போக்குவரத்து அமைச்சு
(xii) 2014 ஆம் ஆண்டிற்கான காணி, காணி அபிவிருத்தி அமைச்சு
(xiii) 2013 ஆம் ஆண்டிற்கான இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்
(xiv) 2014 ஆம் ஆண்டிற்கான அஞ்சல் சேவைகள் அமைச்சு
(xv) 2014 ஆம் ஆண்டிற்கான முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(xvi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் கீழ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2015 மே மாதம் 14 ஆம் திகதிய 1914/33 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய ஆலோசனைக் குழுவின் அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண
(ii) கெளரவ பாலித தெவரப்பெரும
(iii) கெளரவ ஹுனைஸ் பாறூக் - இரண்டு மனுக்கள்
(iv) கௌரவ அஜித் மான்னப்பெரும
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்கள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு நடவடிக்கைகளின் அதிகரிப்பு தொடர்பானது
(ii) கௌரவ வாசுதேவ நாணயக்கார அவர்கள்
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளின் அதிகரிப்பு தொடர்பானது
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ அஜித் குமார அவர்களுக்கு “இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் நிதி அமைச்சர் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து 2015.01.29 ஆம் திகதி இலங்கைப் பாராளுமன்றத்தில் தெரிவித்த கூற்றில் உள்ளடங்கியுள்ள தனியார்துறையின் சம்பளம் மற்றும் படிகளின் பொருட்டு ஊழியர் ஒருவரின் மாதச் சம்பளத்தை ரூபா 2500 ஆல் அதிகரிக்கும் படியான முன்மொழிவை நடைமுறைப்படுத்தும் பொருட்டும் ஒரு சில வகையினதான ஊழியர்களுக்கு தொழிலதிபர்கள் வரவு செலவுத் திட்ட நிவாரணக் கொடுப்பனவொன்றை செலுத்தும் பொருட்டும் அதற்கு இடைநேர்விளைவான கருமங்களின் பொருட்டும் ஏற்பாடு செய்வதற்குமானதொரு” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் தொழில் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“தேர்தல் சீர்திருத்தங்கள்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ ஆர். யோகராஜன் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1825 மணியளவில் பாராளுமன்றம் 2015 ஜூன் 24ஆந் திகதி புதன்ழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






