இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2015 ஜூன் 11ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2015-06-11

கௌரவ சந்திம வீரக்கொடி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2014 ஆம் ஆண்டிற்கான காலி மாவட்டச் செயலகம்
(ii) 2014 ஆம் ஆண்டிற்கான கிளிநொச்சி மாவட்ட செயலகம்
(iii) 2014 ஆம் ஆண்டிற்கான வளிமண்டலவியல் திணைக்களம்
(iv) 2014 ஆம் ஆண்டிற்கான பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(v) 2014 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க இலங்கை சமுத்திர பல்கலைக்கழக சட்டத்தின் 69 ஆம் பிரிவின் (4) ஆம் உப பிரிவின் கீழ் சனாதிபதியால் நியமிக்கப்பட்ட இடைக்காலக் குழுவின் உரிய காலத்தை நீடிப்பது தொடர்பில் திறன் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2015 மே 27 ஆம் திகதிய 1916/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரினால் பொதுமனு சமர்ப்பிக்கப்பட்டது:-

கெளரவ பொன். செல்வராசா

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்கள்

'உலகத் தமிழர் பேரவை' யுடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் நடத்திய சமீபத்திய கலந்துரையாடல் தொடர்பானது


பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-

(i) மறைந்த கௌரவ நெரன்ஜன் விக்கிரமசிங்க
(ii) மறைந்த கௌரவ சஞ்ஜீவ கவிரத்ன


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“சமுர்த்தி பெறுநர்களின் சேமிப்புகளை, அரசியலுடன் தொடர்புபட்ட ஏனையோர் மத்தியில் பகிர்ந்தளித்தல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பந்துல குணவர்தன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1747 மணியளவில் பாராளுமன்றம் 2015 ஜூன் 12ஆந் திகதி வெள்ளிக்ழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom