இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2015 ஜூன் 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2015-06-10

கௌரவ சமல் ராஜபக்ஷ, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’  : நிலையியற் கட்டளை இல. 139 இன் பிரகாரம் கௌரவ சபாநாயகர் அவர்களால் “சபரகமுவ மாகாண  சுற்றுலாத்துறை அதிகாரசபை வரைவு நியதிச்சட்டத்தைப்” பரிசீலிப்பதற்கு சட்டவாக்க நிலையியற் குழு “ஏ” க்கு மேலதிக உறுப்பினர்களை நியமித்தல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2014 ஆம் ஆண்டிற்கான அரசாங்க சேவை ஆணைக்குழு
(ii) 2014 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற சபை முதல்வரின் அலுவலகம்
(iii) 2014 ஆம் ஆண்டிற்கான நீதி அமைச்சு
(iv) 2014 ஆம் ஆண்டிற்கான சிறைச்சாலை திணைக்களம்
(v) 2014 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சு
(vi) 2014 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(vii) 2012 ஆம் ஆண்டிற்கான முதியோர்களுக்கான தேசிய சபையின் ஆண்டு அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கெளரவ கயந்த கருணாதிலக்க - இரண்டு மனுக்கள்                   
(ii) கெளரவ அஜித் மான்னப்பெரும - இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்கள்

வெளிப்படைத்தன்மையற்ற விதத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு ஊழியர்கள் ஆட்சேர்ப்பு செய்தல் தொடர்பானது

(ii) கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்

கொடகெதன இரட்டைக் கொலை வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பானது


ஒத்திவைப்புப் பிரேரணை

“100 நாள் வேலைத்திட்டம்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ புத்திக பதிரண அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2015 ஜூன் 11ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom