2015 ஜூன் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-06-09 |
கௌரவ சந்திம வீரக்கொடி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பின்வரும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன.-
‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம்
‘B’ : சுற்றுலா மீது திட்டமிடப்பட்டுள்ள நியதிச்சட்டம் தொடர்பாக சப்ரகமுவ மாகாண சபையிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள செய்தி
‘C’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2014 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii) 2014 ஆம் ஆண்டிற்கான தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்
(iii) 2014 ஆம் ஆண்டிற்கான மன்னார் மாவட்டச் செயலகம்
(iv) 2014 ஆம் ஆண்டிற்கான மொனராகல மாவட்டச் செயலகம்
(v) 2014 ஆம் ஆண்டிற்கான சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சு
(vi) 2013 ஆம் ஆண்டிற்கான ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்
(vii) 2014 ஆம் ஆண்டிற்கான உணவு ஆணையாளர் திணைக்களம்
(viii) 2014 ஆம் ஆண்டிற்கான தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு
(ix) 2014 ஆம் ஆண்டிற்கான சிவில் விமானச் சேவைகள் அமைச்சு
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 20(4) ஆம் பிரிவின் கீழ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சரினால் ஆக்கப்பட்ட கட்டளைகள்;
(x) 2015 மாச்சு மாதம் 31 ஆம் திகதி 1908/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(xi) 2015 ஏப்பிறல் மாதம் 24 ஆம் திகதி 1911/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(xii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மேல், உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2015 மாச்சு மாதம் 31 ஆம் திகதி 1908/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xiii) தொழில் அமைச்சரினால் (136 ஆம் அத்தியாயமான) சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டத்தின் 63 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xiv) 2012 ஆம் ஆண்டிற்கான தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவகம்
(xv) 2013 ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட லங்கா மின்சார (தனியார்) கம்பனி
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(xvi) 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, விளையாட்டில் ஊக்குவிப்புப் பதார்த்தப் பயன்பாடிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் 3 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படுவதாகிய 34 ஆம் பிரிவின் கீழ் சுற்றுலா மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2015 மே மாதம் 05 ஆம் திகதிய 1913/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(xvii) 1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க கப்பற்றொழில் முகவர்களுக்கு உரிமமளித்தல் சட்டத்தின் 3 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2014 ஓகத்து மாதம் 28 ஆம் திகதிய 1877/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) காணி அலுவல்கள்
(ii) கல்வி அலுவல்கள்
பற்றிய ஆலோசனைக் குழுக்களின் அறிக்கைகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கெளரவ பீலிக்ஸ் பெரேரா
(ii) கெளரவ நந்திமித்ர ஏக்கநாயக்க - நான்கு மனுக்கள்
(iii) கெளரவ வீ.எஸ். இராதாகிருஷ்ணன்
(iv) கௌரவ பாலித ரங்கே பண்டார
(v) கெளரவ எம்.ரீ. ஹஸன் அலி - மூன்று மனுக்கள்
(vi) கெளரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே
(vii) கெளரவ அநுர திசாநாயக்க - இரண்டு மனுக்கள்
(viii) கெளரவ பைஸால் காசிம் - ஐந்து மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்கள்
அரசாங்கத்தின் உடனடி நிவாரண நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்தாமை தொடர்பானது
பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-
(i) மறைந்த கௌரவ தயானந்த ஏ. விக்கிரமசிங்க
(ii) மறைந்த கௌரவ ஏ.எம். முனிதாச பிரேமசந்திர
(iii) மறைந்த கௌரவ அதுல நிமலசிறி ஜயசிங்க விஜயமுனிதேவ
(iv) மறைந்த கௌரவ எம்.ஐ. உதுமாலெவ்வை
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க, ஆட்களைப் பதிவுசெய்தல் சட்டத்தைத் திருத்துவதற்காக
ஆட்களைப் பதிவுசெய்தல் (திருத்தம்)
எனும் சட்டமூலத்தினை கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் கட்டளை
விவாதமின்றி சபையால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவினால் எதிர்கொள்ளப்படும் கஷ்டங்கள்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அஜித் குமார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1916 மணியளவில் பாராளுமன்றம் 2015 ஜூன் 10ஆந் திகதி புதன்ழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






