இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2015 மே 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2015-05-21

கௌரவ சமல் ராஜபக்ஷ, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.-

‘A’  : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2014 ஆம் ஆண்டிற்கான ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்
(ii) 2014 ஆம் ஆண்டிற்கான அனர்த்த முகாமைத்துவ அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(iii) 2014 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்தின் செலவுத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2015


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கெளரவ ஜயந்த கெட்டகொட  
(ii) கெளரவ அசோக் அபேசிங்க - இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்கள்

கோல்டன் கீ வைப்பாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படல் வேண்டும் என்பது தொடர்பானது

கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள மரக்கறி பயிர்ச்செய்கையாளர்களுக்கான சந்தை வசதிகளின் குறைபாடு தொடர்பானது


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

தேசிய ஆசிரியர் கல்வி அதிகாரசபை (நீக்கல்) சட்டமூலம்

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“மத்திய வங்கியினால் 2015 ஆம் ஆண்டில் வெளியிட்ட திறைசேரி முறிகள் வெளியீடு சம்பந்தமான விசாரணைக் குழுவின் அறிக்கை” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை, நிலையியற் கட்டளை 17(2) இன் கீழ் கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றம் 2015 மே 22ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom