2015 மே 19ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-05-19 |
கௌரவ சந்திம வீரக்கொடி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பின்வரும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன.-
‘A’ : கௌரவ நெரன்ஜன் விக்கிரமசிங்க, பா.உ. அவர்களின் இறப்பு
‘B’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2014 ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கி
(ii) 2013 ஆம் ஆண்டிற்கான இலங்கை சேமிப்பு வங்கி
(iii) 2011 ஆம் ஆண்டிற்கான இலங்கை சிமேந்துக் கூட்டுத்தாபனம்
(iv) 2011 ஆம் ஆண்டிற்கான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(v) மத்திய வங்கியினால் 2015 ஆம் ஆண்டில் வெளியிட்ட திறைசேரி முறிகள் வெளியீடு சம்பந்தமான விசாரணைக் குழுவின் அறிக்கை
(vi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் இலங்கை றுகுணு பல்கலைக்கழகத்தைத் தாபிப்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2015 ஏப்பிறல் 07 ஆம் திகதிய 1909/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை
(vii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் இலங்கை களனி பல்கலைக்கழகத்தைத் தாபிப்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2015 மாச்சு 31 ஆம் திகதிய 1908/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை
(viii) 2014 ஆம் ஆண்டிற்கான புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு
(ix) 2014 ஆம் ஆண்டிற்கான பௌத்த மத அலுவல்கள் திணைக்களம்
(x) 2014 ஆம் ஆண்டிற்கான இலங்கை தேசிய புலமைச் சொத்துக்கள் அலுவலகம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(xi) காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயம்) 28(அ) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 16(இ) ஆம் பிரிவின் கீழ் மதுவரி உரிமக் கட்டணம் தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு 2015 பெப்புருவரி மாதம் 13 ஆம் திகதிய 1901/19 ஆம் இலக்க வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xii) 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, குடியியல் வான்செலவுச் சட்டத்தின் 117 (2) ஆம் பிரிவின் கீழ் குடியியல் வான் செலவுக் காப்பு நிர்வாகம் தொடர்பில் விமானச் சேவைகள் அமைச்சரினால் விதிக்கப்பட்டு 2014 ஒற்றோபர் மாதம் 03 ஆம் திகதிய 1882/49 ஆம் இலக்க அதி வேிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xiii) 2015 மாச்சு 11 ஆம் திகதிய 1905/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையினால் திருத்தப்பட்டவாறு 2014 திசெம்பர் மாதம் 22 ஆம் திகதிய 1894/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட இலங்கையில் நீர்மூலங்களையும் அவற்றின் நீரேந்து பிரதேசங்களையும், ஒதுக்கங்களையும் பாதுகாப்பதற்கும் பேணுவதற்குமான தேசிய கொள்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரிற்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் மூன்றாவது அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ (கலாநிதி) சரத் அமுனுகம அவர்கள் சமர்ப்பித்தார்.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கெளரவ திஸ்ஸ கரல்லியத்தே
(ii) கெளரவ வாசுதேவ நாணாயக்கார
(iii) கெளரவ பாலித தெவரப்பெரும
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்கள்
திரு. கோத்தாபய ராஜபக்சவின் மனு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி கௌரவ பிரதம அமைச்சர் அவர்களின் அறிக்கை தொடர்பானது
அதனையடுத்து, 1512 மணியளவில் பாராளுமன்றம் 2015 மே 20ஆந் திகதி புதன்ழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






