2015 ஏப்ரல் 27ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-04-27 |
கௌரவ சமல் ராஜபக்ஷ, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
நிலையியற் கட்டளை இல. 139 இன் பிரகாரம் கௌரவ சபாநாயகர் அவர்களால் தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்களை பரிசீலிப்பதற்கு பின்வரும் சட்டவாக்க நிலையியற் குழுக்களை அமைத்தல்:-
அல் ஜாமியாத்துல் கவ்ஸிய்யா
சம்பிக பிரேமதாச சமுதாய அபிவிருத்தி மன்றம்
இலங்கை நிர்மாணக் கைத்தொழல் சம்மேளனம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2011 ஆம் ஆண்டுக்கான றணவிரு சேவை அதிகார சபை
(ii) 2012 ஆம் ஆண்டுக்கான மீயுயர் நீதிமன்றக் கட்டிடத் தொகுதி முகாமைச் சபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(iii) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2015 பெப்புருவரி 26 ஆந் திகதிய 1903/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை
(iv) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் சிங்கப்பூர் குடியரசு அரசாங்கத்திற்கும் இடையில் இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கும் வருமானத்தின் மீது வரிகொடாது தட்டிக்கழிப்பதைத் தடுப்பதற்குமாக 2014 ஏப்பிறல் மாதம் 03 ஆம் திகதி செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை
(v) 2014 ஆம் ஆண்டுக்கான காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் செயற்திறன் அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) வெகுசன ஊடக, தகவல் அலுவல்கள்
(ii) சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி அலுவல்கள்
பற்றிய ஆலோசனைக் குழுக்களின் அறிக்கைகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
(351 ஆம் அத்தியாயமான) குடிவருவோர், குடியகல்வோர் சட்டத்தைத் திருத்துவதற்காக
குடிவருவோர், குடியகல்வோர் (திருத்தம்)
எனும் சட்டமூலத்தினை கெளரவ மக்கள் ஒழுங்கு மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
விவாதம் நாளை தொடரப்படவுள்ளது.
அதனையடுத்து, 2030 மணியளவில் பாராளுமன்றம் 2015 ஏப்ரல் 28ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






